கேடு கெட்ட கதை சுமோ… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்… கிழித்து தொங்க விட்ட புளூசட்டை!

by sankaran v |   ( Updated:2025-04-26 01:40:17  )
sumo blue satta
X

sumo blue satta

Sumo movie: இயக்குனர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு, உள்பட பலர் நடித்துள்ள படம் சுமோ. கேங்கர்ஸ் படத்துடன் வெளியான இந்தப் படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. படத்தின் கதையைப் பற்றி பிரபல யூடியூப் விமர்சகர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

படத்தோட ஆரம்பத்துல விடிவி கணேஷ் ஒரு காரை ஓட்டிட்டு இருக்காரு. போலீஸ் காரை மடக்கி செக் பண்றாங்க. அங்கே ஒரு பெரிய அட்டைப் பெட்டி இருக்கு. அதுல என்ன இருக்குன்னு போலீஸ் கேட்டா, என் உயிரே போனாலும் அதை மட்டும் சொல்ல மாட்டேங்கறாரு. அப்புறம் அதுக்கு ஒரு பெரிய கதையை சொல்ல ஆரம்பிக்கிறாரு. அதுதான் இந்தப் படத்தோட கேடு கெட்ட கதை.

ஒரு சுமோ ஒருத்தர் கடற்கரையில ஒதுங்கிக் கிடக்கிறாரு. அவரை ஆஸ்பத்திரில கொண்டு போய் பார்த்தா அவருக்கு உயிரு இருக்கு. ஆனா ஒன்றரை வயசு குழந்தைக்கு உள்ள அறிவுதான் இருக்குன்னு சொல்றாங்க. அவரு ஜப்பான்ல உள்ள ஒரு மல்யுத்த வீரர்னு தெரிய வருது. அதனால ஹீரோவும், அவரது ப்ரண்ட்ஸ்சும் கொண்டு போய் சேர்க்க முயற்சிக்கிறாங்க. ஆனா ஜப்பான்ல ஒரு குரூப் அவரு உள்ளேயே வரக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கு. அப்புறம் என்ன ஆகுறதுங்கறதுதான் கதை. இது கூட ஓகே தான்.

ஆனா திரைக்கதையையும் படமாக்குன விதத்திலும் ஒண்ணுமே இல்லாம படமாக்கி வச்சிருக்காங்க. மிர்ச்சி சிவா, யோகிபாபுன்னு இருக்காங்க. காமெடியே இல்லை. காமெடின்னா லாஜிக் இருக்காதுங்கறது தெரியும். ஆனா கதையே லாஜிக் இல்லாம இருக்கு. ஒரு ஆள் எந்த ஊருன்னு கேட்டா ஜப்பான்னு சொல்றான். அவனை அங்கே கொண்டு போய் போலீஸ்ல ஒப்படைச்சா கதை முடியப்போகுது.

இதுல என்னன்னா புதுப்பொண்ணை மறுவீட்டுல கொண்டு போய் விடுற மாதிரி 2 பேரு கூடப் போறாங்க. இது என்ன லாஜிக்னு ஒண்ணுமே புரியல. படத்துல கேமராமேன்னு ராஜீவ் மேனன்னு போட்டுருக்காங்க. ஆனா பயங்கரமா சொதப்பிருக்காங்க. ராஜீவ் மேனன் படம் ஃபுல்லா ஒர்க் பண்ணினாரான்னு தெரியல. படம் 6 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்துட்டாங்க. ஆனா படம் வருது வருதுன்னு இழுத்து பம்முனாங்க. அதைப் பார்த்தா நமக்கு பயமா இருந்துச்சு. படத்தைப் பார்த்த பிறகு இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்னு தோணுது என்கிறார் புளூசட்டை.

Next Story