இருங்கடா வைக்குறோம் உங்களுக்கு ஆப்பு... தியேட்டர்கள் மீது செம காண்டில் சன் பிக்சர்ஸ்...

by சிவா |   ( Updated:2022-04-20 05:33:53  )
beast
X

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சங்களால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. முதல் நாளில் ரூ.36 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் அடுத்த நாளில் இருந்து குறைவான வசூலையே பெற்றது. இப்படம் தமிழகத்தில் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபக்கம் பீஸ்ட் படம் சரியில்லை என்கிற விமர்சனமும், ஒருபக்கம் கேஜிஎப்-2 படம் மாஸாக இருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்ததால் ரசிகர்கள் கேஜிஎப்-2 ஓடும் திரையரங்குகள் பக்கம் சென்றனர். எனவே, பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு கேஜிஎப்-2 படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது. பல தியேட்டர்களில் பீஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட 4 காட்சிகளில் ஒரு காட்சி கேஜிஎப்-2 படத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் கடுப்பான சன் பிக்சர்ஸ் தரப்பு எந்தெந்த தியேட்டர்களில் பீஸ்டை எடுத்துவிட்டு கேஜிஎஃப் படத்தை திரையிடுகிறார்கள் என்கிற கணக்கை எடுக்க துவங்கியுள்ளதாம். அடுத்து சன் பிக்சர்ஸ் படம் வெளியாகும் போது அந்த திரையரங்குகளுக்கு தங்கள் படங்களை கொடுக்கக் கூடாது என நினைக்கிறதாம்.

beast

சினிமா என்பது வியாபாரம். திரையரங்க அதிபர்களை பொறுத்தவரை மக்களுக்கு எந்த படம் பிடித்திருக்கிறதோ அதை ஓட்டி காசு சம்பதிப்பதுதான் அவர்களின் வேலை. அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இதற்கு பழி வாங்கும் எண்ணத்தோடு இருந்தால் என்ன செய்ய முடியும் என்கிறார்கள் சில தியேட்டர் அதிபர்கள்...

Next Story