‘கோட்’ பட சாட்டிலைட்டை ரத்து செய்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்! இவ்ளோ பிரச்சினை நடந்திருக்கா?

vijay
Goat Movie: விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டு வருகிறது. படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு வெளி நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட படக்குழு ரஷ்யாவில்தான் இருக்கிறார்கள்.
இரட்டை வேடங்களில் இந்தப் படத்தில் கலக்கும் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா போன்ற மற்ற முக்கியமான நடிகர்களும் நடித்து வருகிறார்கள். படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் என்று சமீபத்தில்தான் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுதானா? நெல்சன் திலீப்குமார் போட்ட ஸ்கெட்ச்…
இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் காலங்களில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கின்றன.விஜய் படம் என்றாலே வியாபாரம் பெருமளவு நடக்கும் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதே போல் ஆரம்பத்திலேயே இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 52 கோடிக்கு வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கிடைத்த தகவலின் படி அந்த உரிமையை சன் பிக்சர்ஸ் ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் ஒருவேளை விஜயின் அடுத்த படத்தை தயாரிக்க இருந்த தானயா அந்தப் படத்தில் இருந்து விலகியதாகவும், தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: 50 வருட சினிமா அனுபவம்.. சுக்கு நொறுக்கிய பா.ரஞ்சித்! ரஜினிக்கு காட்டிய நன்றிக்கடனா இது
ஆனால் விஜய் சன் பிக்சர்ஸ் வேண்டாம் என சொல்லிவிட்டார் என்றும் அதனாலேயே கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரத்துசெய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் ஏஜிஎஸுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை சரிவர அமையாததால்தான் உரிமை ரத்தானது என்று சொல்லப்படுகிறது.
என்ன இருந்தாலும் விஜய்க்கு என தனி பிஸினஸ் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரச்சினையால் வேறொரு நிறுவனம் ஒரு பெரும் தொகையை கொடுத்துக் கூட உரிமையை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதுவும் நாளை வெளியாகும் முதல் சிங்கிளை பொறுத்தும் நிலைமை மாறலாம் என்றும் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: சன் டிவி டாப் 10 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்!.. மொத்த வாழ்க்கையும் மாறிப்போச்சே!..