ஜெயிலர் சூப்பர் ஹிட்!. அனிருத்தையும் வெயிட்டா கவனித்த கலாநிதி மாறன்.. வெளியான புகைப்படம்!..

by சிவா |   ( Updated:2023-09-04 16:43:17  )
anirudh
X

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். கடந்த சில வருடங்களில் இவரின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்க துவங்கி இப்போது விஜய், ரஜினி, கமல் படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார்.

பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய ரஜினி படங்களுக்கும் இசையமைத்தார். கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் படத்திலும் இப்போது நடித்து கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் இசைதான். கோலிவுட்டை பொறுத்தவரை இப்போது அதிக சம்பளம் பெறும், இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே.

இதையும் படிங்க: லியோ தயாரிப்பாளருக்கும் தலைவலியை கொடுத்த கலாநிதி மாறன்!.. அனிருத்துக்கும் கார் கொடுத்து அசத்திட்டாரே!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியான இப்படம் வசூலை வாரி குவித்தது. இதுவரை 600 கோடியை தாண்டி வசூல் செய்துள்ள இப்படம் ரூ.700 கோடி வசூலை தொடும் என கணிக்கப்படுகிறது.

இந்த படத்திற்காக சம்பளமாக ரூ.80 கோடியும், லாபத்தில் பங்கையும் ரஜினி பெற்றார். 3 நாட்களுக்கு முன்பு அந்த காசோலையை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ரஜினியிடம் கொடுத்தார். மேலும், ரஜினியின் வீட்டின் முன்பு சில கார்களை நிறுத்தி அவருக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க சொல்ல, ரஜினி ஒரு பி.எம்.டபிள்யூ காரை தேர்ந்தெடுத்தார்.

இதையும் படிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..

அதேபோல், நெல்சனுக்கும் ஒரு காரை கலாநிதிமாறன் பரிசளித்தார். ஆனால், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனிருத்துக்கு கலாநிதிமாறன் எதையும் கொடுக்கவில்லை என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா, ஹுக்கும் மற்றும் தலைவரு நிரந்தரம் ஆகிய பாடல்களே இப்படத்திற்கு மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கியது.

kalanithi

இதை ஜெயிலர் பட விழாவில் ரஜினியே இதை பேசியிருந்தார். ஆனாலும், அவருக்கு கலாநிதிமாறன் பரிசாக எதையும் கொடுக்காமல் இருந்தார். இந்நிலையில், அனிருத்துக்கும் கலாநிதிமாறன் பரிசளித்துள்ளார். அனிருத்துக்கு கலாநிதி மாறன் செக் கொடுக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: லியோ படத்துக்கு இத்தனை தீம் மியூசிக்கா!.. அடுத்த பாட்டு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!..

Next Story