Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது விஜயை எதிரியாக நினைக்கிறார் எனக் கூறப்பட்டாலும் அதெல்லாம் இல்லை என பலரும் டயலாக் பேசி வந்தனர். ஆனால் இந்த விஷயத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு விஷயம் நடந்து இருக்கிறது. சூப்பர்ஸ்டார் இனி விஜய் தான் என வாரிசு படத்தின் விழாவில் சரத்குமார் பேசியது சர்ச்சையானது.
ஆனால் அப்போதே விஜய் எந்த மறுப்பையும் தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. எல்லா பேட்டிகளிலும் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கெல்லாம் பதிலடியாக ஜெயிலர் விழாவில் ரஜினிகாந்த் பேசினார். அப்போது கழுகு பறந்து கிட்டே இருக்கும் காக்கா டிஸ்ட்டர்ப் பண்ணும் எனக் கதை சொன்னார். காக்கா விஜய் தான் என பலரும் நக்கல் அடிக்க தொடங்கினர்.
இதையும் படிங்க: அட! என்னமா அவரு சிம்பிள்ளா இருந்தா சீனை போடுவீங்களா..? ரஜினிக்கு நடந்த அவமரியாதை..!
இதனால் ஜெயிலர் வெற்றியை பலரும் எதிர்பார்த்து காத்திருக்க படம் 650 கோடியை நெருங்கியது. இந்நிலையில் தற்போது விஜயின் லியோ பக்கம் திரும்பியது. இப்படம் ரிலீஸுக்கு நெருங்கி விட்டது. இப்படத்தின் வசூலை அதிகரிக்க காலை காட்சி வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து லியோ படத்துக்கு அதிகாலை காட்சி ஒதுக்கப்பட்டது.
ஒருநாளைக்கு 5 காட்சிகளை வர ஓடலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் கடுப்பான ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸுக்கு கால் செய்து அரசுடன் நெருக்கமாக இருக்கும் உங்களாலே வாங்க முடியலைனு சொன்னீங்க. அப்போ அவங்களால எப்படி முடிஞ்சது என செம டோஸ் விட்டாராம்.
ரஜினி விஜயை எதிரியாக பார்க்கவில்லை என கூறிய விஷயத்துக்கு எதிராக விஜயை தனக்கு போட்டியாக சூப்பர்ஸ்டார் பார்க்க தொடங்கி விட்டாரா என ரசிகர்களும் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்த அறிவிப்பால் வசூல் படுஜோராக இருக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ‘லால்சலாம்’ படத்தில் வேதனையை கொட்டித்தீர்த்த ரஜினி! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் பாருங்க
19ந் தேதி வெளியாகும் இருக்கும் லியோ படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் எனக் கூட்டணியே ஓவர் எதிர்பார்ப்பினை கிளப்பி இருக்கிறது. இதனால் படத்தின் புக்கிங்கும் களைக்கட்டலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…