தற்போது பழைய சன் பிக்ச்சர்ஸ்க்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எந்திரன், அயன், சிங்கம் என பல்வேறு பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த சன் பிக்ச்சர்ஸ் தற்போது ஏன் தடுமாறி வருகிறது என தெரியவில்லை.
சூப்பர் ஸ்டாரை வைத்து தர்பார், அண்ணாத்த என இரண்டு திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் மீண்டும் சூப்பர் ஸ்டாரை வைத்து நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது சன் பிக்சர்ஸ்.
அதேபோல கடைசியாக வெளியான தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்துடன் களமிறங்கிய கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு தற்போது அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்டு, பீஸ்ட் திரைப்படம் நிறைய திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு வருகிறது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஹிட் எனும் லாபம் தந்த திரைப்படமாகவே தற்போது வரை கருதப்படுகிறது. இருந்தாலும், சூர்யாவின் சிங்கம், அயன் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை ET திரைப்படம் அடையவில்லை.
சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக பெரிய ஹீரோ கால்ஷீட் மற்றும் பெரிய இயக்குனர்களுடன் ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுத்து வைத்தால் போதும் என்று நினைத்து கதை தேர்வில் கோட்டை விட்டு விடுகிறார்களோ என தோன்ற வைக்கிறது.
இதையும் படியுங்களேன் – விஜய் இந்த விஷயத்தை மாத்திதான் ஆகணும்.! – ‘பீஸ்ட்’ நெல்சன் அதிரடி பேச்சு.!
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக தலைவர் 169, தனுஷின் திருச்சிற்றம்பலம், விஜய் சேதுபதி – இயக்குனர் பொன்ராம் திரைப்படம் என பல திரைப்படங்கள் வரிசையாக காத்திருக்கிறனர்.
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…