நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார் என சர்ச்சைகள் வெடித்தாலும், ஒரு பக்கம் ஜெயிலர் படத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை திரையிட்ட பல திரையரங்குகளில் 80 முதல் 90 சதவீதம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் ஓடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவாலா முதல் காலில் விழுந்தது வரை என ஜெயிலர் படத்தின் ப்ரமோஷன் மாறிக் கொண்டே இருக்கிறது. வட மாநிலங்களில் உள்ள இந்துத்வா ரசிகர்களை கவர்வதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர்களை சந்திப்பது அவர்களுக்கு ஜெயிலர் படத்தை போட்டுக் காட்டுவது என்கிற வேலையில் இறங்கியிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இதையும் படிங்க: வனிதா பொண்ணுக்கு 18 வயசு ஆகிடுச்சாம்!.. விஜய் பையனுக்கு அடுத்த ஹீரோயின் பார்சல்!..
சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
ஆனால், சன் பிக்சர்ஸ் மறுபக்கம் தொடர்ந்து ஜெயிலர் படத்தை பலமாக ப்ரமோட் செய்து 3வது வாரத்திலும் அந்த படத்தை ஓட வைத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் வார அதிகாரப்பூர்வ வசூல் 375 கோடியை கடந்து விட்டதாக அறிவித்த சன் பிக்சர்ஸ் தற்போது இன்னொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: யூடூ ப்ரூட்டஸ்!.. விஜய் முதுகில் விக்ரமும் குத்தப் போறாராம்!.. என்னடா இது லியோ வசூலுக்கு வந்த சோதனை?..
அமெரிக்காவில் 40 கோடி வசூல்:
அமெரிக்காவில் இதுவரை ஜெயிலர் திரைப்படம் 5 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளதாக லாஸ் வீகாஸில் உள்ள பிரம்மாண்ட ஹாலிவுட் கட்டடத்தில் உள்ள பில்போர்டில் அதிகாரப்பூர்வமாகவே ஜெயிலர் படத்தின் வசூலை திரையிட்டு மாஸ் காட்டி வருகிறது. 5 மில்லியன் டாலர் என்றால் இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டுமே 40 கோடி ரூபாய் என்றால் ஒட்டுமொத்தமாக ஓவர்சீஸில் ஜெயிலர் திரைப்படம் 166 கோடி வரை வசூல் செய்திருக்கும் எனக் கூறுகின்றனர்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் 375 கோடி ரூபாயை கடந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 450 கோடி வசூலை கடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை 11 நாட்களில் கடந்து விட்டதாக ரஜினிகாந்த் ரசிகர்களும் சில பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…