சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்ஸ்…

Published on: November 23, 2024
Sun serials
---Advertisement---

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ அப்டேட்.

சிங்கப் பெண்ணே: ஆனந்தி மற்றும் அன்பு கோவிலில் இருக்க என்ன ஆனாலும் நம்முடைய காதல் குறித்து மகேஷ் சாரிடம் சொல்லப்போவதாக ஆனந்தி கூறுகிறார். இருவரும் கோவிலை விட்டு வெளியில் வர மகேஷ் உடன் மித்ரா அங்க வருகிறார்.

இதையும் படிங்க: ரோகிணிக்கு விஜயா வைத்த சூப்பர் செக்.. ராதிகாவை விளாசிய இனியா.. தங்கமயிலின் திட்டம்!..

செய்றதையும் செஞ்சுட்டு எப்படி நிக்கிறாங்க பாரு. இவங்கள அடி மகேஷ் என்கிறார் மித்ரா. ஆனால் மித்ராவிற்கு அடி விழுகிறது.

மருமகள்: பிரபுவின் அப்பா இந்த வேண்டுதலை மட்டும் நிறைவேற்றி கொடும்மா என கேட்கிறார். ஆதிரை நீங்க அவர் மேல உண்மையா பாசம் வச்சிருக்க தான் இப்படி பேச முடியுது என்கிறார். பிரபு நீ என்கூட தனிக்குடித்தனம் வரவில்லை என்றால் இந்த வீட்டிலயும் உன் கூட வாழ மாட்டேன் என்கிறார்.

கயல்: கயல் குடும்பத்தினர் கோயிலில் இருக்க நீங்கள் இங்கு வரக்கூடாது வெளியில் செல்லுங்கள் என்கின்றனர். எழில் எவ்வளவு பணம் எனக் கேள் ஒரே செக்கில் தருவதாக கூறுகிறார். கயல் உங்களுடைய பணம் தொலைந்ததற்கு எங்க அப்பா காரணமில்லை. இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்ட பெரியப்பா தயங்கி நிற்கிறார்.

இதையும் படிங்க: Vikram: பிரம்மாண்டத்த நம்புனா பரலோகம்தான்! அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. விவரம்தான்

மூன்று முடிச்சு: நந்தினியை ரத்தினவேலனின் மகள் அவருடைய கெஸ்ட் ஹவுஸ் இருக்க தூக்கி வருகிறார். இவளை என்ன செய்வது என தான் சொல்வதாக கூறுகிறார். மாதவி நந்தினி தொலைந்த விஷயம் அம்மாவிற்கு தெரியக்கூடாது என பேசிக் கொண்டிருக்கிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் நந்தினி என கேட்க அவள் சமையல் கட்டில் இருக்கலாம் என கூறுகிறார். இதனால் கடுப்பாகும் அருணாச்சலம் அவளை நேற்று இரவில் இருந்து காணவில்லை என உண்மையை கூறுகிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.