மருமகள் முதல் கயல் வரை… சன் டிவி டாப்5 தொடர்களின் இன்றைய சூப்பர் அப்டேட்!..

சன் சீரியல்கள்
Sun serials: டிஆர்பியில் சன் டிவியில் முதலிடத்தில் இருக்கும் ஐந்து தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
மருமகள்: ஆதிரையை அழைக்கும் அவரது சித்தி என் பேச்சைக் கேட்டால் உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என கூறுகிறார். இதை பிரபு மற்றும் அவரது அப்பா ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இனிமேல் இவளை பேச விட்டால் நம்ம பொண்ணு வாழ்க்கை கெத்து விடும். விடக்கூடாது அவளை என ஆதிரை அப்பா நினைத்துக் கொள்கிறார். பிரபுவின் அப்பா அவரைப் பார்க்க ஆதிரை வீட்டிற்கு வருகின்றனர். என்ன விஷயம் என பிரபு கேட்க முக்கிய விஷயம் ஒன்று பேச வந்ததாக கூறுகிறார்.
இதையும் படிங்க: கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலாவுக்கு… அடுத்த அறிக்கையுடன் வந்த பிரபல நடிகர்..
கயல்: வீட்டிற்கு வரும் சுப்பிரமணி கயிலை காசுக்காக எழிலை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். இது தெரியாமல் நீ இவள் பின்னாடி அலைந்து கொண்டிருக்கிறாய் என்கிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சியாக கூட பொறந்தால் தான் பாசமா. கொஞ்சம் பாசமாக தான் இருந்து பாரேன் என்கிறார் கயல். சுப்பிரமணி என்னுடைய வாழ்நாள் எதிரியே நீ தான் என்கிறார்.
சுந்தரி: அனு மன்னித்து சாப்பாடு கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என கார்த்திக் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தரி வீட்டிற்கு வர அவள் செய்யும் விஷயம் அவளுக்கே பிரச்சனையாக வந்து விடுமோ என பயமாக இருப்பதாக பாட்டி பேசிக் கொண்டிருக்கிறார். அனுவை சமாதானம் செய்து கொண்டு இருக்கும் போது கார்த்திக் அங்கு வருகிறார்.
இதையும் படிங்க: தளபதி69 படத்திற்கு இத்தனை இயக்குனர்களிடம் கதை கேட்டாரா தளபதி… லிஸ்ட்டில் இருந்தவரே சொல்லிட்டாரே…
சிங்கப் பெண்ணே: ஆனந்தி மற்றும் மகேஷ் பேசிக் கொண்டிருக்க கையில் இருக்கும் பையை பிடுங்கி எறிகிறார். இதனால்தான் எல்லா பிரச்சனையும் என மகேஷ் கத்துகிறார். இதை அன்பு பார்த்துக் கொண்டிருக்கிறார். லேடீஸ் ஹாஸ்டலில் நான் பண்ணின தப்புக்கு ஆனந்தி தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கா என காயத்ரி பேசுகிறார். அதை வார்டன் கேட்டு விடுகிறார். மகேஷிடம் அழகனை மட்டும் தூக்கி போட சொல்லாதீங்க என ஆனந்தி அழுகிறார்.
மூன்று முடிச்சு: நந்தினி, உங்க அம்மாவ வெறுப்பேத்த நீங்க செய்ற ஒவ்வொரு காரியமும் எரிச்சலா இருக்கு என சூர்யாவிடம் கூறுகிறார். சுந்தரவல்லி இவளுக்கு பிடிக்கலனா இவள இந்த வீட்டை விட்டு போக சொல்லுங்க. கெட் லாஸ்ட் என கத்துகிறார். நந்தினி தன்னுடைய அக்காவிற்கு கால் செய்து, நடந்ததை நினைத்து அழுகிறதா. நடக்கப்போவது நினைச்சு அழுகிறதா என பயமாக இருக்கு என பேசிக் கொண்டிருக்கிறார்.