latest news
மருமகள் முதல் கயல் வரை… டிஆர்பி ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்!…
SunTV: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் நான்கு சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ அப்டேட்கள்.
மருமகள்: அதிரை தன்னுடைய நாத்தனார் உடன் சேர்ந்து கடைக்கு செல்வதாக பிரபு அப்பாவிடம் சொல்லிவிட்டு செல்கிறார். அவர் சென்ற பின்னர் ஆதிரையின் அப்பா வந்து தில்லை உண்மையை சொல்லாமல் மறைத்து என் பெண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டியே என சட்டையை பிடிக்க ஆதிரை அங்கு வந்து விடுகிறார்.
இதையும் படிங்க: தெலுங்கை காப்பி அடிக்கணும்.. அப்போதான் வருவேன்.. தனுஷுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்!..
கயல்: எழிலை பார்க்க மருத்துவமனை செல்லும் கயலுக்கு அவர் காணாமல் அதிர்ச்சி உண்டாகிறது. இதைத் தொடர்ந்து வேலு தான் எழிலை கடத்தி வைத்து இருக்கலாம் என கயல் உறவினர் சத்தம் போட கயலும் கோபத்தில் வேலுவை திட்டிக் கொண்டிருக்கிறார். எழிலை எங்கு வைத்திருக்கிறாய் தயவுசெய்து சொல் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மூன்று முடிச்சு: நந்தினி அருணாச்சலத்திடம் நம்ம வீட்டுக்கு ஏசி மெக்கானிக் இரண்டு பேர் வந்தாங்க அவங்க தான் திருடன் என்கிறார். மாதவி திடீரென இவ நெற்றியில் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு வந்து இவங்க கடைசில வேற ஒருத்தவங்க கடத்தினாங்க என கூறுகிறாள் என்கிறார். அருணாச்சலம் நந்தினி அப்பாவிடம் இதை யார் செய்தார்கள் இவளை எப்படி சிக்க வச்சாங்க என்பதை நான் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்கிறார்.
இதையும் படிங்க: சிக்கலில் ரோகிணி… ராதிகாவை வெளியேற்றிய ஈஸ்வரி… ஹீரோயிசம் காட்டிய கதிர்!..
சிங்கப் பெண்ணே: ஆனந்தி யாழினியிடம் எனக்கு வேற பிரச்சனை இருக்கு. நான் உடனே ஹாஸ்டலுக்கு சென்றாக வேண்டும் என கூறிவிடுகிறார். ஆனந்தி அப்பா ஹாஸ்டலுக்கு வந்து இருக்க அங்கு வரும் மித்ரா இவர்கள் உங்களிடம் சிலவற்றை மறைப்பதாக கூறுகிறார். என்ன மறைக்கிறார்கள் என கேட்கிறார். ஆனந்தியை மாடியில் விட்டுவிட்டு யாழினி வர அவர் அம்மா மாடியில் ஒளித்து வச்சிருக்கீங்களா என அவரைத்தேடி மாடிக்கு செல்கிறார். அவர் வருவதை ஆனந்தியும் பார்த்து விடுகிறார்.