டிஆர்பியில் டாப் 5…சன் டிவி சூப்பர்ஹிட் தொடர்களின் புரோமோ… இத பாருங்க!...

by Akhilan |
sunserials
X

sunserials

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தில் இருக்கிறது. இதன் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கயல்: எழில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பெரியப்பா சரவணவேலுவின் அம்மாவிடம் சென்று உங்கள் மகன் கயல் மற்றும் எழிலை ஊரை சுற்றி காட்டுகிறேன் என அழைத்துப் போனான் இன்னும் வரவில்லை என்கிறார். கயல் இந்த விஷயத்தை செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுக்கணும் என கூறுகிறார். சரவணன் அதை செஞ்சதே நான் தான் என மனதிற்குள் பேசிக்கொள்கிறார்.

இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.

சுந்தரி: சுந்தரி தமிழை கார்த்திக் தான் ஏதோ செய்திருக்கிறான். என் பிள்ளை எனக்கு வேணும். அவ இல்லாமல் நான் தாலி கட்டிக்க மாட்டேன் எனக் கூறுகிறார். இதைக் கேட்ட வெற்றி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிடிபட்ட நபர் கையில் இருந்து போனை வாங்கி கால் செய்ய அவர் சொன்ன கேளுங்க அந்த நம்பருக்கு கால் செய்யாதீங்க. பண்ணீங்கன்னா பாம் வெடிச்சிடும் எனப் பதற வைக்கிறார்.

மூன்று முடிச்சு: சூர்யா நந்தினியை கடத்துனது எங்க அம்மா தான் எனக்கு நல்லா தெரியும் என பேசிக்கொள்கிறார். திருநங்கைகள் இருவர் கார் டிக்கிக்குள்ளே இருந்து ஏதோ சத்தமருவதை பார்த்துவிடுகின்றனர். அதை உள்ளே சென்று காவல் அதிகாரியிடம் இவர்கள் வந்த காரில் ஏதோ சத்தம் கேட்பதாக கூறுகின்றனர். திறந்து பார்க்க உள்ளே நந்தினி இருக்கிறார்.

சூர்யா நான் நினைத்தது போல காவல் நிலையத்தில் ஒரு விஷயம் நடந்தது என்னை மீறி இனி அவங்களை யார் காப்பாற்றுகிறார்கள் என பார்க்க இருப்பதாக மனதிற்குள் சபதம் போட்டுக்கொள்கிறார்.

சிங்கப் பெண்ணே: மகேஷ் அம்மா அந்த பட்டிக்காட்டுக்கு என் பிள்ளை கேக்குதா. அன்புவின் அம்மாவிடம் சென்று ஆனந்திய உங்க வீட்ல தான தங்க வச்சு இருக்கீங்க. ஒரு ஆதரவில்லாத பொண்ணுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது எவ்வளவு பெரிய புண்ணியம் என்கிறார். உண்மையை தெரிந்து கொள்ளும் அன்புவின் அம்மா வேகமாக வீட்டிற்கு வருகிறார்.

இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..

ஆனந்தியின் அக்கா அப்பா வேற ஊருக்கு போயிருக்காரு. ஆனந்தி ஹாஸ்டலில் இல்லாமல் அன்பு வீட்டில் இருப்பது தெரிந்தால் என்ன ஆகும் என அவருக்கு போன் போடுகிறார். ஆனந்தி எழுந்து மாடியில் மறைந்து அமர்ந்து கொள்ள அன்புவின் அம்மா ஏய் என கத்துகிறார்.

மருமகள்: பிரபுவின் அப்பா அவன் பேச்சைக் கேட்காமல் நீனும் பிடிவாதம் பிடித்தால் இந்த பிரச்சனை முடியாது என்கிறார். மனோகரி ஆதிரையின் அப்பாவிடம் உங்க மருமகனுக்கு ஆதரையை கூப்பிட்டுக்கொண்டு தனிக்குடித்தனம் போக வேண்டுமா என்கிறார்.

பிரபு நம்ம நாளைக்கு போறோம் பால் காய்ச்சி அங்கேயே நம்ம வாழ்க்கையை தொடங்குறோம் என்கிறார். ஆதிரை என்னால் வர முடியாது எனக் கூற அப்போ என்னால் உன்னோடு வாழ முடியாது என கத்தி விட்டு செல்கிறார். இதை வேல்விழி மறைந்திருந்து கேட்டு விடுகிறார்.

Next Story