டிஆர்பி இருந்தும் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

by Akhilan |
டிஆர்பி இருந்தும் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
X

சன் டிவியில் பிரபலமாக இருந்து வந்த சீரியலை இந்த வாரத்துடன் முடிக்க இருப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அண்ணன் மற்றும் தங்கையின் கதையை மையமாக வைத்து சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் வானத்தைப் போல. இதில் முதலில் துளசியாக ஸ்வேதா கெல்ஜ் நடித்தார். பின்னர் அவர் வெளியேற அவருக்கு பதில் மன்யா ஆனந்த் எண்ட்ரி கொடுத்தார். அதுப்போல அண்ணனாக நடித்த தமன் வெளியேற ஸ்ரீ உள்ளே வந்தார்.

இதையும் படிங்க: சூரிக்கு இது ஒரு ஆடுகளம்!.. விருது நிச்சயம்!.. கொட்டுக்காளி டிரெய்லர் வீடியோ…

சீரியலின் முக்கிய கேரக்டர்கள் வெளியேற உள்ளே வந்த புதுமுகங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து, டிஆர்பியிலும் வானத்தைப் போல நல்ல இடத்தினை பிடித்து இருந்தது. ஆனால் தற்போது திடீரென சீரியலை முடித்து கொள்ள டிவி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறதாம்.

நிறைய புது சீரியல்கள் வரிசையில் இருப்பதால் வானத்தைப் போல மட்டுமல்லாது இன்னும் சில முக்கிய சீரியல்களும் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. மேலும் இந்த முடிவு சீரியல் பிரபலங்களுக்கு கடைசி ஷெட்யூலில் தான் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் முன்னணி கேரக்டரில் இந்த ஸ்வேதா மற்றும் தமன் வெளியேறும் போதே பிரச்னை தயாரிப்பு தரப்பால் தான் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. ஷூட்டிங் தேதிகளை குழப்பியதால் தான் அவர்கள் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனாலும் சீரியலை ஆயிரம் எபிசோட்டுக்கு இழுக்காமல் முடிவெடுத்து விடுவதே நல்லது. நிறைய புது சீரியல் எண்ட்ரியாக இருப்பதும் இந்த முடிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லெஜெண்ட் அண்ணாச்சி பட கதையும் எஸ்.கே 23 கதையும் ஒன்னா? முருகதாஸுக்கு இதே வேலையா?

Next Story