தமிழ் சினிமாவில் 90களில் தனது அசத்தலான வில்லத்தனத்தால் சினிமா ரசிகர்களை மிரளவைத்தவர் நடிகர் ரகுவரன். பொதுவாக வில்லன் நடிகர்களை பார்த்தாலே பார்க்கும் ரசிகர்களுக்கு கோபம் கோபமாக வரும். ஆனால் ரகுவரன் மீது யாரும் இதுவரைக்கும் கோபத்தை காட்டியதே இல்லை. அந்த அளவுக்கு ரகுவரனுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தனர்.

இப்பொழுதும் இருந்து வருகின்றனர். அவருக்கே ஒரு தனி ஸ்டைலாக இருப்பது அவர் கூறிய அந்த வசனம் தான். ஐ நோ, ஐ நோ என்ற வார்த்தைதான். அதை ஒன்றை வைத்துக் கொண்டுதான் இன்று வரை ஏராளமானோர் ரகுவரன் மாதிரி மிமிக்ரி செய்து கொண்டு வருகின்றனர்.
சினிமாவிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட நல்ல கலைஞனாக இருந்தார் ரகுவரன். ஒரு படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அந்தப் படம் முடியும் வரை நிஜத்திலும் அதே கதாபாத்திரமாகவே இருப்பாராம். ஒரு கொடூரமான வில்லன் என்றால் வீட்டிலேயும் அந்த மாதிரியான கோபத்துடனும் அரக்கக் குணத்துடனும்தான் இருப்பாராம்.

அப்படி இருந்தால்தான் படத்தின் ரிசல்ட் நாம் நினைத்த மாதிரி என்ற ஒரு நம்பிக்கையில் வாழ்ந்தவர். இவர் நடிகை ரோகிணியை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ரகுவரன் குடிக்கு அடிமையாகி தன் உடம்பை கெடுத்து உடல் நிலை மோசமானதால் உயிரெழுந்தார்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி ரகுவரனை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.அதாவது ரகுவரனுக்கும் சுந்தர் சிக்கும் இடையே நல்ல ஒரு வைப் இருக்குமாம். இருவருக்கும் இடையில் ஒரு ஃபன்னியான சம்பவங்கள் நடந்திருக்கிறதாம்.

இதில் சுந்தர் சி நடித்த தலைநகரம் ஒரு மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. அந்தப் படம் தான் சுந்தர் சி ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம். அந்தப் படத்தை ரகுவரன் பார்த்துட்டு சுந்தர் சிக்கு போன் செய்தாராம். அப்போது சுந்தர் சி வேறொரு படத்திற்காக பொள்ளாச்சியில் இருக்க ரகுவரனிடமிருந்து அழைப்பு வந்ததாம்.
அப்போது ரகுவரன் ‘என்ன பாஸ் , உங்க தலைநகரம் படத்தை பார்த்தேன், படம் ரொம்ப நல்லாயிருக்கு, நீங்களும் நல்லா நடிச்சிருக்கீங்க, இப்படியே நடிங்க, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன், இன்னும் கொஞ்சம் நடிங்கனு சொல்லுவாங்க, ஆனால் நீங்கள் நீங்களாவே இருங்க’ என்று சொல்லி பாராட்டினாராம். அதனால் இதை பற்றி குறிப்பிட்டு சொன்ன சுந்தர் சி ‘ரகுவரன் இப்படி பேசுற ஆளே கிடையாது, ஆனால் அன்னிக்கு அப்படி பாராட்டினார், அதை மட்டும் என்னால மறக்க முடியாது’ என்று கூறினார்.
இதையும் படிங்க : என்னோட இந்த நிலைமைக்கு காரணம் கேப்டன்தான்! ரோபோ யோசிச்சுதான் பேசுனீங்களா?
