முதல் நாள் படப்பிடிப்பில் வடிவேலுவால் நடந்த அதிசயம்! சுந்தர் சி சொன்ன தகவல்

by Rohini |   ( Updated:2025-04-21 04:42:31  )
sundarc
X

sundarc

Sundar C: 15 வருடங்களுக்கு பிறகு வடிவேலுவும் சுந்தர் சியும் கேங்கர்ஸ் என்ற படத்தில் மறுபடியும் இணைந்திருக்கிறார்கள். எப்படி பார்த்திபன் வடிவேலு கூட்டணி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ அதை போல் சுந்தர் சி வடிவேலு கூட்டணியையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கினார்கள். கிரி, வின்னர் போன்ற படங்களில் சுந்தர் சி வடிவேலுவை சரியான முறையில் பயன்படுத்தியிருப்பார்.

இருவரும் சேர்ந்து நடித்த தலை நகரம் திரைப்படத்திலும் இவர்களின் காமெடி இன்று வரை மீம்ஸ் மெட்ரீயலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான் 15 வருடத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. வரும் 24 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது பேசிய வடிவேலு எங்களை யாரோ பிரித்துவிட்டார்கள்.

ஆனால் சேர்த்து வைக்க யாரும் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இணைந்திருக்கிறோம் என்று வடிவேலு கூறினார். இந்தப் படத்தில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, படத்தை புரோமோட் செய்ய சுந்தர் சியும் வடிவேலுவும் பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இந்தப் படத்தில் கேத்தரின் தெரசா மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு பேட்டியில் சுந்தர் சி பேசும் போது நாங்கள் இணைகிற படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கண்டிப்பாக மழை பெய்யும் என்றும் கூறினார். ஏன் கேங்கர்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கூட முதல் நாள் படப்பிடிப்பில் மழை பெய்தததாம். உடனே வடிவேலு ‘இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். இப்போது கடும் கோடை வெயில். இந்தப் படத்தின் விழா சமீபத்தில் நடந்தது. அப்போது கூட காலையில் சரியான மழை.’

அதனால் அப்படி ஒரு கூட்டணி எங்கள் கூட்டணி என்று வடிவேலு கூறினார். மேலும் கிரி படம் சுந்தர் சியின் பேனரில் முதலில் தயாரான படம். அந்தப் படத்தின் முதல் காட்சியை வடிவேலுவை வைத்துதான் எடுத்திருக்கிறார்கள். அப்போது சுந்தர் சி முருகன் பக்தர் என்பதால் முருகன் படத்தை கும்பிட்டு வடிவேலு திரும்புவது போல அந்த ஷாட்டாம். எப்போது வடிவேலுவை வைத்து அந்த காட்சியை எடுக்க ஆரம்பித்தேனோ அதிலிருந்து 20 வருடமாக என் பேனர் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என சுந்தர் சி கூறினார்.

Next Story