ஓவர் வீராப்பால் தலைல துண்ட போட்டதுதான் மிச்சம்! விஜய்க்கு எதிரா சுந்தர் சி எடுத்த ரிஸ்க்

by Rohini |   ( Updated:2024-05-05 12:38:27  )
sundar
X

sundar

Director Sundar c: சுந்தர் சி இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சுந்தர் சி சமீப காலமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவருடைய சினிமா அனுபவங்களை பற்றியும் சில சுவாரசியமான தகவல்களை கூறி வருகிறார்.

அதில் நடிகர் அஜித்தை பற்றியும் விஜயை பற்றியும் அவர் கூறிய ஒரு சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அதுவும் சுந்தர் சி இயக்கத்தில் விஜய் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். ரஜினி, கார்த்திக், பிரசாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து சுந்தர்சி ஏகப்பட்ட படங்களை இயக்கியிருக்கும் நிலையில் விஜய் வைத்து ஒரு படம் கூட அவர் இயக்கியதே இல்லை.

இதையும் படிங்க: ரஜினியின் சோகப்பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? சரியான நேரத்தில் சமாளித்து அசத்திய வைரமுத்து

இதைப் பற்றிய ரசிகர்கள் அவரிடமே பலமுறை கேள்விகளை கேட்டு இருக்கின்றனர். அதற்கான பதிலை சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஒருமுறை விஜய்க்காக சுந்தர் சி அவரிடம் கதை சொன்னாராம். அந்த கதை விஜய்க்கும் மிகவும் பிடித்து போய்விட்டதாம். ஆனால் முதல் பாதி மட்டுமே விஜய்க்கு பிடிக்க இரண்டாம் பாதி விஜய்க்கு பிடிக்கவே இல்லையாம்.

அதனால் அந்த படம் அப்படியே நின்று போனதாகவும் ஆனால் இதே கதையை படமாக எடுத்து ஜெயித்து காட்ட வேண்டும் என சுந்தர் சி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் விஜயின் முடிவு தான் சரியானது என அப்போதுதான் சுந்தர் சிக்கு புரிய வந்திருக்கிறது. ஏனெனில் அவர் அந்த கதையை வேறொரு நடிகரை வைத்து எடுத்திருக்கும் நிலையில் அந்தப் படம் சரியான பிளாப் ஆகியிருக்கிறது. இந்த படத்தில் நடித்த நடிகர் யார் என்பதை இப்போது கூறினால் அது சரி வராது என அந்த பேட்டியில் சுந்தர்சி கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: அன்பே சிவம் படத்தால எனக்கு நிறைய நல்லது நடந்திருக்கு!.. இப்ப சொல்றேன்!.. சுந்தர்.சி நெகிழ்ச்சி!..

Next Story