காமெடி படத்தை எடுத்த சுந்தர்.சி. கமர்ஷியல் பக்கம் வந்தது எப்படி? அவரே சொல்லிட்டாரே!

sundar c arunachalam
ஆரம்பத்தில் காமெடியான ஜானரில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுந்தர்.சி. இவருடைய படங்கள் எல்லாமே ஹிட் தான். அதன்பிறகு ரஜினியின் அருணாச்சலம் படத்தை எடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்தார். இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, கலகலப்பு, கலகலப்பு 2. தீயா வேலை செய்யணும் குமாரு… இந்த 5 படங்கள்தான் முழுநீள காமெடி படம். மேட்டுக்குடி, கிரி, மதகஜராஜா படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னர்ஸ். அதுல ஹியூமர் நல்லா பேசப்பட்டது.
படத்துல பார்த்தீங்கன்னா ஒரு எமோஷனல் கன்டன்ட் இருக்கும். ஆக்ஷன் இருக்கும். அருணாச்சலம் அந்த ஜானர். எனக்கு ரொம்ப பிடிச்சது அதுதான். நான் சின்ன வயசுல இருக்கும்போது வளர்ந்து வர்ற காலகட்டத்துல எல்லாம் ரஜினி, கமல் மாஸா வர்றாங்க. சகலகலாவல்லவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன் மாதிரி படங்கள் வருது.
எனக்கு அந்த ஜானர் படங்கள் ரொம்ப பிடிக்கும். தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கும்போது ஆக்ஷன் வந்தா 'ஏ.. ஏ…'ன்னு கத்துவாங்க. நல்ல காமெடி. நல்ல எமோஷனல்.. வரும்போது நல்லா பிடிக்கும். அந்த வகை படங்கள்தான் எல்லாமே.

கிரி, மேட்டுக்குடி, அருணாச்சலம், மதகஜராஜா எல்லாமே அந்த ஜானர்தான். அருணாச்சலம் படம் ஆரம்பிக்கும்போதே அதுக்குள்ள ஒரு எமோஷனல் கன்டன்ட் இருந்தது. அப்பா, மகன் ஃபீலிங். பர்ஸ்ட் ஆஃப்ல அவருக்கும், பேமிலிக்கும் சம்பந்தம் இல்லங்கற மாதிரி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கால இளம் இயக்குனர்களுக்கும் டஃப் கொடுக்குற வகையில் சுந்தர்.சி. கமர்ஷியல் ஹிட் கொடுத்து வருகிறார். அவரது அரண்மனை 3 வரை உள்ள படங்களே அதற்கு சாட்சி. அடுத்து கலகலப்பு 2 வரை படங்கள். அடுத்து எப்போ என்று கேட்குறாங்க. அந்த வகையில் இப்போ வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ். இந்த டிரெய்லரே மீண்டும் இந்தக் கூட்டணி கலக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது.