சுந்தர் சி விஜய்க்கு சொன்ன கதை… விஷால் நடித்து ஃப்ளாப் ஆன திரைப்படம்... அடப்பாவமே!
சுந்தர் சி தமிழ் சினிமாவின் முன்னணி கம்மெர்சியல் இயக்குனராக வலம் வருபவர். இப்போதும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. தனது முதல் படைப்பான “முறைமாமன்” திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனராக உருவானவர்.
இவரது திரைப்படங்கள் அனைத்தும் காமெடி கலந்த சென்டிமென்ட் திரைப்படங்களாகவே இருக்கும். இந்த நிலையில் சுந்தர் சி விஜய்க்கு ஒரு கதையை கூறியிருக்கிறார். ஆனால் அந்த கதையில் விஜய் சில மாற்றங்கள் செய்யும்படி கூறியிருக்கிறார். அதன் பின் அந்த கதையில் விஷால் நடித்து படம் ஃப்ளாப் ஆனது. அது என்ன திரைப்படம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
சுந்தர் சி ஒரு முறை விஜய்யிடம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் கதையை கூறினாராம். அதனை கேட்டு முடித்த விஜய், “முதல் பாதி அருமையாக இருக்கிறது. இரண்டாம் பாதியை கொஞ்சம் மாற்றியமைக்க முடியுமா?” என கேட்டிருக்கிறார். ஆனால் சுந்தர் சிக்கு அந்த கதையை மாற்ற விருப்பம் இல்லை.
அதனை தொடர்ந்து அந்த கதையை விஷாலிடம் கூறினார். அந்த கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் விஷால் நடித்திருக்கிறார். ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. படம் சுமாராகவே ஓடியது. அத்திரைப்படத்தின் பெயர் “ஆக்சன்”. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: தொழில் அதிபரான AK.. 2013-லயே போட்ட திட்டம்.. சொன்னதை செய்து காட்டிய அஜித்!