போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

Published on: May 3, 2024
---Advertisement---

SundarC: இயக்குனர் சுந்தர்.சி எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியவர். ஆனால் அவர் தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் கால் செய்தால் அதை அவர்களுக்கு ஹலோ சொல்ல மாட்டார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்கத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து புகழில் இருப்பவர் சுந்தர்.சி. ஒரு கட்டத்தில் நடிப்பிலும் இறங்கி முதல் படத்திலே செம வரவேற்பு பெற்றார். இதுவரை 34 படங்களை இயக்கியவர். 17 படங்களில் நடித்தும் இருக்கிறார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரை இயக்கிய சில இயக்குனர்களில் சுந்தர்.சியும் ஒருவர்.

இதையும் படிங்க:நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா?

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மணை படத்தின் நான்காம் பாகம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பல வருடங்கள் கழித்து மீண்டும் வெற்றி பாதைக்கு சுந்தர்.சி திரும்பி இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளது. தற்போது கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தினை இயக்க இருக்கிறார். 

இப்படத்தில் மிர்ச்சி சிவா நடிப்பார் எனக் கூறப்படுகிறது. இருவருக்கும் பெரிய நட்பு இருக்கிறதாம். பொதுவாக போன் செய்தால் ஹலோ என்று கூறுவதற்கு பதில் மிர்ச்சி சிவாவை சூப்பர்ஸ்டார் என்றே சுந்தர்.சி அழைப்பாராம். அவர் அகில உலக சூப்பர்ஸ்டார் என்று சொல்லி சீன் போடுவார். அதை  கலாய்க்க கூப்பிட்டு அதுவே பழக்கமாகிவிட்டது.

இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! ஏன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

ஆர்.ஜே.பாலாஜியை நான் தங்க தமிழன் என அழைப்பேன். அவர் என்னை சிங்க தமிழன் என அழைப்பார். அப்படி கூப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டோம். ஹலோ சொல்லும் பழக்கமே இல்லை எங்களிடம் எனக் கூறி இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.