நீங்களாம் வேண்டாம்டா… அவங்க இருந்தா தான் தப்பிப்போம்… கலகலப்பு3 படத்தின் ஹீரோ இவர்கள் தானாம்…
SundarC: சுந்தர்.சி தன்னுடைய அடுத்த சீசன் படமான கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் குறித்தும் அதில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
குஷ்பூ தயாரிப்பில் உருவான திரைப்படம் கலகலப்பு. இப்படத்தினை இயக்கியவர் சுந்தர்.சி. விமல், சிவா, அஞ்சலி, ஓவியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவானது. முதலில் இப்படத்திற்கு மசாலா கேஃப் என்றே பெயர் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!…
ஆனால் அதன் பின்னர் இப்படத்திற்கு கலகலப்பு எனப் பெயர் வைத்தனர். இப்படத்தில் நடிகர் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை சுந்தர்.சி உருவாக்கினார். ஆனால் முதல் பாகம் கொடுத்த வரவேற்பை இரண்டாம் பாகம் பெறவில்லை.
இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசாவுடன் மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் பெரிய அளவில் வசூலும் பெறவில்லை. தமிழில் இந்த வருடத்தில் இதுவரை வெளியான எல்லா திரைப்படங்களுமே மோசமான தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க: மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…
இதில் ரீ ரிலீஸான கில்லி திரைப்படத்தினை தவிர சமீபத்தில் ரிலீஸான அரண்மணை 4 மட்டுமே ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகத்தினை சுந்தர்.சி இயக்க இருக்கிறார். இதில் நாயகர்களாக ஜெய் மற்றும் மிர்ச்சி சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.