யாரு படம் ஹிட்டுன்னு பார்த்துறலாம்!.. கமல்ஹாசனுக்கு டஃப் கொடுத்த சுந்தர்ராஜன்…

Published on: April 27, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான நடிகர் என அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். கமர்சியல் படங்களில் மட்டுமல்லாமல் சோகமான கிளைமாக்ஸ் இருக்கும் படங்களில் கூட துணிச்சலாக நடிக்க கூடியவர் கமல்ஹாசன்.

இப்போதைய சினிமாவை போல் இல்லாமல் 1970 – 80 காலகட்டங்களில் சோகக் கிளைமேக்ஸ் உள்ள படங்களும் கூட நல்லபடியான வெற்றியை கொடுத்து வந்தன. முக்கியமாக இயக்குனர் டி.ராஜேந்தர் நடித்த பல படங்கள் சோக முடிவுகள் கொண்ட திரைப்படங்களாகவே இருந்தன அவை யாவும் அப்போது பெரும் ஹிட் கொடுத்தன.

அதேபோல சோக முடிவு கொண்ட படங்களில் கமலும் நடித்துள்ளார் அதில் முக்கியமான ஒரு திரைப்படம் வாழ்வே மாயம். 1982 ஜனவரியில் இந்த திரைப்படம் வெளியானது. கண்டிப்பாக கமல்ஹாசன் படம் என்பதால் இந்த படம் வெகு நாட்களுக்கு ஓடி ஹிட் கொடுக்கும் என பட குழு எதிர்பார்த்தது.

ட்விஸ்ட் வைத்த சுந்தர்ராஜன்:

ஆனால் இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை திரைப்படமும் அதே வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் வெளியானது. சுந்தர்ராஜனை ஒரு நகைச்சுவை நடிகராக பலருக்கும் தெரியும் ஆனால் அவர் இயக்குனராக தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தை பொருத்தவரை அந்தப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தன. இளைய நிலா பொழிகிறதே, ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா, போன்ற ஏழு பாடல்களும் சரியான ஹிட் கொடுத்தன.

வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை இரண்டு திரைப்படமும் ஒரே கதையை கொண்ட திரைப்படமாகும். கடுமையான நோயால் சாகவிருக்கும் கதாநாயகன் தான் காதலித்த பெண்ணை நிராகரிப்பதே இரண்டு திரைப்படங்களிலும் முக்கிய கருவாக இருக்கும்.

பிப்ரவரி மாதம் வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது. கமல்ஹாசன் படத்திலிருந்து ஒரு மாத காலம் தாமதமாக வெளியாகி இருந்தாலும் பிறகு 450 நாட்கள் வரை கிட்டத்தட்ட ஒன்றை வருடங்கள் ஓடி ஹிட் கொடுத்தது பயணங்கள் முடிவதில்லை.

இப்படியான மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்ராஜன் என்பது தற்போதைய தலைமுறையினர் அறியாத ஒரு தகவலாக இருக்கும்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.