தமிழ் சினிமா உலகில் பட்டையை கிளப்பிய மும்பை வரவு ஹீரோயின்கள்!.. அட இவ்வளவு பேரா!..

by sankaran v |   ( Updated:2024-02-25 12:18:34  )
Actresses
X

Actresses

பாலிவுட்டில் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் உண்டு. அவர்களது லிஸ்ட் இது. அவர்கள் இங்கு ஏன் வந்தார்கள். எப்படி நிலைத்து நின்றார்கள்? வடக்கில் அவர்களுக்கு மார்க்கெட் எப்படி இருந்தது போன்ற தகவல்களைப் பார்ப்போம்.

தமன்னா

சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற பாலிவுட் படத்தில் தான் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அது படுதோல்வி ஆனது. ஆனால் பாடல்கள் ஹிட். அதன்பின் அபிஜித் சாவந்தின் முதல் ஆல்பத்தில் தோன்றினார். அங்கு மார்கெட் டல் அடித்ததால் தென்னிந்தியா வந்தார். இங்கு தன் பவரைக் காட்டிவிட்டார்.

ஜோதிகா

டோலி சாஜா கே ரக்னா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார். பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். இது படு தோல்வி. அதன்பின் தமிழ்ப்பட உலகில் வந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். வாலி படத்தில் அஜீத்துடன் நடித்து, குஷியில் விஜய் உடன் நடித்து முன்னணி நடிகை ஆனார்.

சிம்ரன்

சனம் ஹர்ஜாய் படம் தான் இவரது முதல் பாலிவுட் படம். படுதோல்வி. தொடர்ந்து தேரே மேரே சப்னே படத்தில் நடித்து வெற்றி பெற்றார். பல படங்கள் தோல்வி அடைந்ததால் தென்னிந்தியா வந்தார். இங்கு அஜீத், விஜய், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

இதையும் படிங்க... ‘வணங்கான்’ கைவிட்டு போனாலும் சூர்யா செய்த தியாகம்!.. பதிலுக்கு பாலா என்ன செஞ்சார் பாருங்க!..

குஷ்பு

தி டர்னிங் ட்ரெயின் மற்றும் டார்ட் கா ரிஷ்தா ஆகிய பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜானூ, டான் பதான் ஆகிய படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார். மேரி ஜங்கில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு அங்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தந்தையுடன் வேறு பிரச்சனை. தென்னிந்தியா வந்தார். செம மார்கெட் கிடைத்தது.

ஹன்சிகா மோத்வானி

ஷகா லகா பூம் பூம் என்ற டிவி நிகழ்ச்சி, கோய் மில் கயா என்ற பாலிவுட் படம் ஆகியவற்றில் குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் தொடங்கினார். தேரா சுரூர், ஹை டூ ஹனி ஹை போன்ற படங்கள் பிளாப் ஆயின. தொடர்ந்து தென்னிந்தியா வந்து சாதித்து விட்டார்.

Next Story