Connect with us

Cinema History

நம்பினால் நம்புங்கள்….சத்தியமா இது தான் நடந்த உண்மை…!எதை அடித்துச் சொல்கிறார் யோகிபாபு?

தமிழ்சினிமாவில் வித்தியாசமான ஹேர் கெட்டப்புடன் அகலமான முகத்துடன் இருக்கும் இவருக்கு இப்படி ஒரு மாஸா எனக் கேட்கத் தோன்றும். ஆனால் தன்னோட மைனஸையே பிளஸ்ஸாக்கிக் கொண்டு தனக்கென தனிபாணியை உருவாக்கி காமெடியில் முத்திரைப்பதித்து தமிழ்சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க கலகலவென சிரிக்க வைப்பவர் தான் யோகிபாபு.

இவர் பெயரிலேயே யோகம் இருப்பதாலோ என்னவோ தமிழ் ரசிகர்களின் மனதில் பச்சக் என இடம்பிடித்துவிட்டார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், தளபதி விஜய் ஆகியோருடன் நடித்த அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொள்கிறார்.

yogibabu

தளபதி விஜய் எப்பவும் உடம்பப் பார்த்துக்கடா…ன்னு சொல்வாரு. அதே போல அஜீத் சார் விஸ்வாசம் படப்பிடிப்பின் போது யோகி, நமக்கு முகம், உடம்பு தான் சொத்துன்னு என் மேல அக்கறையா சொல்வாரு…. நெருங்கிய சொந்தக்காரங்கக் கூட இவ்வளவு அக்கறையோட யாரும் சொல்றதில்ல.

இவங்க சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு…சர்கார், பிகில் படங்கள்ல படப்பிடிப்பின் போது நல்ல என்டர்டெயின்மென்ட்டா இருக்கும். விஜய், அட்லி எல்லோரும் கேலி, கிண்டல்னு ஜாலியா பழகுவாங்க. எப்பவுமே செட் கலகலன்னு இருக்கும்.

தர்பார் படத்துல ரஜினியோட நடிச்ச அனுபவம் ரொம்ப சூப்பர். தலைவர் தலைவர் தான். எனர்ஜி. எப்பவுமே அவர் கிங். செம எனர்ஜி. அவ்ளோ போல்டுனஸ். அப்படி என்னைக் கட்டிப்பிடிச்சாரு. எப்படி இருக்கீங்கன்னு கேட்டாரு.

படத்திலயும் நாம தான் காமெடி பண்றதுன்னு கிடையாது. அவரு பார்க்காததா…எவ்ளோ காமெடி சோலா காமெடியாவே நிறைய பண்ணிருக்காரு. எவ்ளோ விஷயங்கள் பண்ணிருக்காரு. காமெடியே இல்லாம படம் பண்ணிருக்காரு.

Yogibabu

ரஜினி சாரு, விஜய் சாரு, அஜீத்சாரு இவங்கக்கிட்ட தான் நாம கத்துக்கணும். நம்ம ஒண்ணும் கிடையாது. நம்ம பெரிசாலாம் கிடையாது. சினிமால நாம கத்துக்குட்டி தான். ஆனா இவங்கக்கிட்ட இருந்துதான் அவ்ளோ விஷயங்களையும் கத்துக்கணும். இவங்கள எல்லாம் நாம பெருமையா பேசறத விட பிரம்மாண்டமா பார்க்கணும். அவ்ளோ விஷயங்கள் கத்துக்கிட வேண்டியது இருக்கு.

என்கிட்ட ரஜினி சார் ஒண்ணும் கேட்டாரு. கோலமாவு கோகிலா சூப்பர் யோகிபாபுன்னாரு. தேங்க்யு சார்னு சொன்னேன். நீ படம் புல்லா ஏன் வரலன்னு கேட்டாரு. படம் புல்லா வந்தா வண்டில ஏறுற மேட்டர்…அது கொஞ்சம் இதுவாயிரும் சார்….புல்லாவே பார்த்துட்டு வந்து டக்குன்னு வண்டில ஏறுனா அது கொஞ்சம் சுவாரசியம் இருக்காது…

கொஞ்சநேரம் நயன்தாரா முன்னால ட்ராவல் பண்ணிட்டு, கொஞ்ச நேரம் இல்லாம கேப் விட்டுட்டு நயன்தாரா அவங்களுக்கு பிரச்சனைன்னு வரும்போது அப்போ நான் என்ட்ரியா ஆவணும்…அப்போ ஆடியன்ஸ்க்கு தெரிஞ்சு போயிடும். இவங்க தான் மாட்டப்போறாரு…இவங்க தான் ஆடு…வெட்டப்போறாங்கன்னு…! இவங்கக்கிட்ட தான் கத்துக்கணும். அதுக்கப்புறம் ட்ராவல்…! னு சொன்னேன்…

யோகிபாபு இங்க வாங்கன்னு சொல்வாரு….கொஞ்ச நேரம் பேசிட்டு, யோகிபாபு ஷாட்டுக்குப் போகணும்…வரட்டுமான்னு கேட்பாரு…என்கிட்ட போய் கேக்கறீங்கள சார்…?னு சொல்வேன்…

விஸ்வாசம் பட ஷ_ட்டிங்கிற்கு ஹைதராபாத்ல ராமோஜில அஜீத் சார் கூட நடிக்கப் போவேன்…அப்போ என்ன யோகிபாபு எப்படி இருக்க? என்ன படத்துல இருந்து வாரீங்க? அண்ணே…சர்கார் படம்…விஜய் சார் படத்தில நடிச்சிட்டு இருக்கேன்;…ஓ….சாரு எப்படி இருக்காரு? நல்லா இருக்காருன்னு சொல்வேன்…சூப்பர்னு சொல்வாரு….

yogibabu, vijay

அங்க முடிச்சிட்டு சர்கார் ஷ_ட்டிங்கிற்கு வருவேன்…விஜய் சார் என்னடா…எங்க சுத்திட்டு வர்ற…எங்க போச்சு வண்டின்னு கேட்பாரு…அண்ணே ஹைதராபாத் போயிட்டு வர்றேன்…என்ன படம்? இது மாதிரி அஜீத் சார் படம்…விஸ்வாசம் போயிட்டு வார்றேன்னு சொல்வேன்…ஓ..அப்படியா…சூப்பர் சூப்பர்ன்னு சொல்வாரு… எப்படிறா இருக்காரு….சாரு எப்படிறா இருக்காருன்னு கேட்பாரு…இது சத்தியமா நடந்த உண்மை. இதை அவருக்கிட்டயும் சொல்வேன். இரண்டு பேருமே அவரவரை விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிடுவாங்க…

google news
Continue Reading

More in Cinema History

To Top