அய்யா எப்போ நீங்க ப்ரீ?… தளபதிக்காக வெயிட்டிங்கில் இருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்… எதுக்காம்?
Super Good Films: விஜயின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தளபதிக்காக ரொம்பவே வெயிட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு முக்கிய காரணம் ஒன்றும் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது நடித்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி இருக்கிறது.
இதையும் வாசிங்க:டைரக்ஷனில் களமிறங்க ரெடி! தனது முதல் ஹீரோவை பகிரங்கமாக அறிமுகப்படுத்திய ஜெயம் ரவி – இவரா?
இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி68. இப்படம் ரா ஏஜெண்ட்டாக விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும், டைம் ட்ராவலர் படமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தினை முடித்தவுடன் விஜய் ஒரு படத்தில் தான் நடிப்பார். அந்த படத்தினை தொடர்ந்து அரசியலில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக்க சில வருடம் சினிமாவில் இருந்து விலகி இருக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயின் 69வது படத்துக்கான எதிர்பார்ப்பும் தற்போதே அதிகரித்துள்ளது. இந்த படத்தினை இயக்க மட்டுமல்லாமல் விஜயை அடுத்து இயக்க வெற்றிமாறன், சுதா கொங்காரா, அட்லீ என ஒரு படையே வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.
இதையும் வாசிங்க:எப்பா ஒரு முடிவுக்கு வாங்கப்பா!.. ரசிகர்களை குழப்பும் விடாமுயற்சி டீம்!.. பின்னணியில் இருப்பது யார்?…
ஆனால் தங்களுடைய 100வது படத்தில் விஜய் தான் நடிப்பார் என்ற முடிவில் சூப்பர்குட் பிலிம்ஸ் கறாராக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மலையாளத்தில் ஒரு படத்தினை தயாரித்து வரும் நிறுவனத்தின் அடுத்த படம் 100வது படம் என்பதால் விஜயின் கால்ஷூட்டிற்கு இப்போதே பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து வரலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.