ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் அம்மன் திரைப்படங்களுக்கு என்று பெரிய வரவேற்பு இருந்து வந்தது. அம்மன் படங்களுக்கு என்று மிகவும் பிரபலமாக இருந்தவர்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா போறோர். இவர்களுக்கு ஈடுகொடுக்க யாரும் இருந்ததில்லை. அம்மனை அப்படியே கண்முன் நிறுத்துபவர்கள்.

இப்படி ஏகப்பட்ட அம்மன் படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களால் இன்று ஒரு அம்மன் படத்தை கூட பார்க்க முடிவதில்லை. பாளையத்து அம்மன், அம்மன், கோட்டை மாரியம்மன், ஸ்ரீராஜராஜேஸ்வரி, ராஜகாளி அம்மன், படை வீட்டு அம்மன் போன்ற படங்கள் எல்லாம் அம்மனை மையமாக வைத்து குறிப்பாக பெண்களை கவர்ந்த படங்களாகும்.
இதையும் படிங்கள் : திருச்சிற்றம்பலம் பட விழாவில் பிரகாஷ்ராஜ் சொன்ன சுவாரஸ்யமான குட்டி கதை

இப்படி நிறைய அம்மன் படங்களை கொடுத்த பல தயாரிப்பு நிறுவனங்கள் இன்று அம்மன் மாதிடியான படங்களை எடுக்கவே தயங்குகின்றனர். ஏனெனில் இப்ப உள்ள காலகட்டங்களில் பொருளாதார சிக்கல்கள், இந்த சூழ் நிலைக்கு ஏற்றவாறு அம்மன் படங்களை எடுக்க வேண்டுமென்றால் பணத்தை வாரி இறைக்க வேண்டியிருக்கிறது.

இதையும் படிங்கள் : இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!
மேலும் அப்படி எடுத்தாலும் பெண் ரசிகர்கள் தான் சாமி படங்களையே பார்க்க வருவார்கள். அவர்களுக்காக பெரும் பொருட்செலவில் படத்தை எடுப்பது என்பது எளிதல்ல என நினைக்கின்றனர். இந்தக் காரணத்திலாயே பல நிறுவனங்கள் அம்மன் படங்களை எடுக்க முன்வர மறுக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக நீண்ட நாள்களுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி மக்களின் ரசனையை புரிந்து அதற்கேற்ப மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார்.





