More
Categories: Cinema History Cinema News latest news

கமலுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினிகாந்த்… படமும் மாஸ் ஹிட்டாம்..!

Kamal Hassan: ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது கோலிவுட்டிற்கே தெரிந்த விஷயம் தான். ரஜினி எண்ட்ரி ஆகி வளர இருந்த காலத்தில் ஏற்கனவே கமல் ஒரு இடத்தினை பிடித்து விட்டார். அவர் கிட்டத்தட்ட கோலிவுட்டில் முக்கிய இடத்தில் இருந்தார்.

இதனால் பெரும்பாலான படங்களில் முதலில் கமலை நடிக்க வைக்கவே பலரும் விரும்புவார்கள். அது தவறும் பட்சத்திலேயே மற்ற நாயகர்களுக்கு அந்த வாய்ப்பு போகுமாம். அப்படி ஒரு இடத்தில் இருந்து இருக்கிறார் கமல். அப்படி ஒரு படம் அவருக்கு வந்து அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

இதையும் படிங்க: விஜயிடம் தலைவர்171 கதையை சொன்ன லோகேஷ்…! எனக்கு இப்படி கதை பிடிக்காதுடா..!

அந்த படம் ரஜினிக்கு போய் யோசிக்காமல் ஓகே சொல்லி அவர் நடித்து ரிலீஸான அந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பெரிய ஹீரோ ஒருவர் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். அதுவரை ரஜினி நடிக்காத ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் அவர் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

அப்படி என்ன படம் என யோசிக்க தோணுமே? அந்த படம் முரட்டுக்காளை. ரஜினியின் சினிமா கேரியரில் முதல் முறையை ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பு செய்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் இந்த படம் உருவானது.

முதலில் இந்த படத்தின் ஹீரோவாக படக்குழு கமலை தான் அணுகி இருக்கிறார்கள். ஆனால் அப்போது பிஸியாக நடித்து கொண்டு இருந்த கமல் கால்ஷீட் பிரச்னையால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். உடனே ரஜினியை அணுக அவர் ஓகே சொல்லி இருக்கிறார். இந்த மூவர் காம்போவில் முரட்டுக்காளை வெளியான சமயத்தில் தான் போக்கிரி ராஜா திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியின் வில்லன் மீது இரக்கம் கொண்ட ரசிகர்கள்… அப்போ அந்த காட்சி வேணாம்… தூக்கி போட்ட படக்குழு..!

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஜெய்சங்கர் நடித்தார். அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக படத்தின் முதல் அறிவிப்பில் இருந்து ரிலீஸ் ப்ரோமோஷன்கள் வரை இருவருக்கும் சம அளவு மரியாதை கொடுக்கப்பட்டதாம். ரஜினி மெனக்கெடவே மாட்டார் எனச் சொல்வர்களுக்கு பதிலடியாக இப்படத்தில் நடந்த ரயில் சண்டையில் டூப் போடாமலே ரஜினி நடித்திருப்பார் என்பதும் ஆச்சரியப்படும் தகவல்கள் தான்.

Published by
Akhilan

Recent Posts