கார் கிளீனர் முதல் நடிகர் வரை!.. தூக்கிவிட்ட சூப்பர்ஸ்டார்!.. ராகவா லாரன்ஸ் உருவான கதை!..
சினிமாவில் வாய்ப்பு என்பது எப்படி யார் மூலம் கிடைக்கும் என சொல்ல முடியாது. பல வருடங்கள் போராடியும் பலருக்கும் சரியான வாய்ப்புகள் கிடைக்காது. இதில் நடிகர்கள், இயக்குனர்கள் என எல்லாமே அடக்கம். சிலருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாது.
இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரின் பெயர் லாரன்ஸ். ராகவேந்திரா சாமியை தனது குருவாக நினைப்பதால் தனது பெயருக்கு முன் அதை வைத்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக நுழைந்தவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். சில படங்களில் நடித்தார்.
இதையும் பிடிங்க: எங்கள காப்பாத்திக்க ஒரே வழி.. இப்படி இறங்கிட்டாங்களே? வீடியோவை போட்டு ஷாக் கொடுத்த நயன்
அப்படி நடித்ததில் முனி திரைப்படம் அவருக்கு கை கொடுத்தது. ‘சரி இதுதான் இனிமே நம்ம ரூட்’ என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களில் நடித்தார். அப்படி உருவான காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் தொடர்ந்து காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு, ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்குமளவுக்கு முன்னேறியிருக்கிறார். அதோடு, கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சத்தியராஜை ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆக்கிய வசனத்தை சொன்னவர் இவர்தானாம்!. அட இது தெரியாம போச்சே!..
80,90களில் பல படங்களுக்கும் சண்டை காட்சிகளை அமைத்த சூப்பர் சுப்பராயனிடம் கார் கிளீனராக வேலை பார்த்தவர்தான் லாரன்ஸ். சுப்பராயனுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்போது நடனம் ஆடி காட்டுவாராம். ஒரு நாள் ரஜினி அதை பார்த்துள்ளார். அடுத்தநாள் சுப்பராயனை தொடர்பு கொண்ட ரஜினி ‘உங்களிடம் கார் கிளீனராக வேலை செய்யும் அந்த பையனை அனுப்பி விடுங்க. அவனுக்கு நடனத்தில் ஆர்வம் இருக்கிறது’ என சொல்லிவிட்டார்.
மேலும், பிரபுதேவாவை தொடர்புகொண்டு ‘நான் ஒரு பையனை உன்னிடம் அனுப்புகிறேன். அவனுக்கு நடனங்களை சொல்லிக்கொடு’ என சொல்லிவிட்டார். ரஜினி சொல்லிவிட்டதால் பிரபுதேவாவும் லாரன்ஸை சேர்த்துக்கொண்டார். அதன்பின் பிரபுதேவா நடனமாடும் பாடல்களில் கும்பலில் ஒருவராக நடனமாடினார் லாரன்ஸ்.
ஒரு கட்டத்தில் சொந்தமாக படங்களில் நடனம் அமைக்க துவங்கினார் லாரன்ஸ். அப்படியே அமர்க்களம் உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடினார். இப்படித்தான் டேக் ஆப் ஆனார் ராகவா லாரன்ஸ். இதன் காரணமாகத்தான் ரஜினியை ‘தலைவா’ என எப்போதும் அன்போடு அழைத்து அன்பு செலுத்தி வருகிறார். நடன கலைஞர், நடன இயக்குனர், நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.