1000 ரூபாய் அட்வான்ஸ் போதும்.! இது தான் சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் வெற்றி ரகசியம்.!

0
491

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் சிவாஜி. அதுவரை வெளியான தமிழ் படஙக்ளில் அந்த படம் தான் அதிக பட்ஜெட். இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார்.

கதைக்கு என்னென்ன பிரமாண்டம் தேவையோ அதனை சமரசமில்லாமல் படமாக்கி இருப்பார்கள் படக்குழுவினர். இப்படத்தின்  கதை , எப்படி இந்த படம் வர வேண்டும் என்பதை உணர்ந்து ரஜினி இந்த படத்திற்காக தனது சம்பளத்தை படம் முடிந்து வாங்கி கொள்கிறேன் என கூறிவிட்டாராம்.

வெறும் 1000 ரூபாய் மட்டும் அட்வான்ஸ் வாங்கி கொண்டு, இந்த படத்தில் நடித்து முடித்தாராம். முதலிலே ரஜினி கறாராக பேசி சம்பளம் வாங்கி இருந்தால் படத்திற்கு செலவு செய்ய சில சமயம் காசு இருந்திருக்காது,  அதனால் படத்தின் தரம் கூட குறைந்திருக்கலாம். அதன் பிறகு வெளியாகி படத்தின் வெற்றி பற்றி சொல்ல தேவையில்லை. தமிழில் முதல் 100 கோடியை கடந்த திரைப்படம் என்கிற பெருமையை பெற்றது.

இதையும் படியுங்களேன் – பெண்ணை கட்டி புடிக்க சொன்னேன்.. பெத்த புள்ளகிட்ட இப்டிலாமா சொல்வார் நம்ம மன்சூர் அலிகான்.!?

ஆனால் அப்போது அவரது சம்பளம் சுமார் 18 கோடி அதனை, விட்டு கொடுத்து பிறகு வாங்கி கொள்கிறேன் என கூறி, படம் அனைத்து ஏரியாக்களில் விற்ற பிறகே சம்பளம் வாங்கினாராம் ரஜினி. அந்தளவுக்கு படம் மீது அக்கறை கொண்டிருந்தாராம் ரஜினி.

kgf1_cine

அதே போல, தான் அண்மையில் கே.ஜி.எப் 2 படத்திற்கு கூட தனது சம்பளம் 30 கோடியை படம் முடிந்த பிறகு வாங்கி கொள்கிறேன் என படம் முடிந்த பிறகு தான் வாங்கினாராம் யாஷ். அதனால், பட நிறுவனம் படத்திற்க்கு தேவையான பிரமாண்டத்தை சமரசமில்லாமல் இடையூறு இல்லாமல் செய்வார்கள் அதனால், படம் எதிர்பார்த்தபடி வரும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

google news