ஹோம்லி கேரக்டரில் வெளுத்து வாங்கிய புதுமைப்பெண் ரேவதியின் சூப்பர்ஹிட் படங்கள்

by sankaran v |
ஹோம்லி கேரக்டரில் வெளுத்து வாங்கிய புதுமைப்பெண் ரேவதியின் சூப்பர்ஹிட் படங்கள்
X

revathi

தமிழ்சினிமாவில் ரேவதி குடும்பப்பாங்கான பல படங்களில் நடித்து தாய்க்குலங்களைக் கவர்ந்தவர்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் தான். இவரது நடிப்பில் வெளியான சிறந்த படங்களை இங்கு பார்ப்போம்.

மண்வாசனை

manvasanai revathi

1983ல் வெளியான படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படம். பாண்டியன், ரேவதி, விஜயன், வினுசக்கரவர்த்தி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசை அமைத்துள்ளார். அடி குக்கம்மா, ஆனந்த தேன், அரிசி குத்தும், இந்த பூமி, மொகர மூக்கம்மா, பொத்தி வச்ச மல்லிகை மொட்டு ஆகிய மனது மறக்காத பாடல்கள் உள்ளன.

புன்னகை மன்னன்

இந்தப்படத்தில் ரேவதியின் நடிப்பு அற்புதமாக இருக்கும். கமலுடன் ஜோடி சேர்ந்து அவருக்கு இணையாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 1986ல் வெளியான இப்படத்தை பாலசந்தர் இயக்கினார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

கமல் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கமல், ரேவதியுடன் ஸ்ரீவித்யா, ரேகா, டெல்லிகணேஷ், சார்லி, பூவிலங்கு மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

என்ன சத்தம் இந்த நேரம், காலகாலமாக வாழும், சிங்களத்து சின்னக்குயிலே, மாமாவுக்கு குடுமா, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், வான் மேகம் பூ பூவாய் ஆகிய இன்னிசை பாடல்கள் நிறைந்தது.

மௌனராகம்

1986ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் மணிரத்னம். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு மெருகூட்டின.

கார்த்திக், மோகன், ரேவதி, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஓஹோ மேகம் வந்ததோ, நிலாவே வா, சின்ன சின்ன வண்ணக்குயில், பனிவிழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.

தேவர் மகன்

devarmagan

1992ல் வெளியான இந்தப்படத்தில் கமலுடன் இணைந்து ரேவதி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பரதன் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கர் விருதுக்குச் சென்ற படங்களில் இதுவும் ஒன்று. கமல், சிவாஜி, ரேவதி, நாசர், கௌதமி, வடிவேலு, காகா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், தலைவாசல் விஜய், மதன்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

கிராமத்துப் பெண் பஞ்சவர்ணமாக வரும் ரேவதி தனது கள்ளங்கபடமில்லா நடிப்பில் காண்போரைக் கொள்ளை கொள்கிறார். சாந்து பொட்டு, போற்றிப் பாடடி, வானம் தொட்டு, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகா, மாசறு பொன்னே, மணமகளே, வெட்டறுவா ஆகிய பாடல்கள் உள்ளன.

புதுமைப்பெண்

1984ல் வெளியான படம். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கியுள்ளார். பாண்டியன், ரேவதி, பிரதாப் போத்தன், ஒய்.ஜி.மகேந்திரன் ஜனகராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக ராஜசேகர் நடித்துள்ளார்.

இளையராஜா இசை அமைத்துள்ளார். காலை நேரம், காதல் மயக்கம், கண்ணியில சிக்காதையா, கஸ்தூரி மானே, ஓ ஒரு தென்றல் ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story