இது கட்டாயம் பார்க்க வேண்டிய மலையாளப்படம்....! பார்த்தால் அசந்து போவீங்க...பாஸ்!
மலையாளப்படம் என்றாலே நமக்கு ரொம்ப மெதுவாகப் போகும். அழுத்தமான கதையாக இருக்கும். இல்லேன்னா அந்த மாதிரி காட்சிகள் ஏராளமாக இருக்கும் என்ற எண்ணம் தான் வரும்.
80களில் மலையாளப்படம் என்றாலே ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அப்போது அங்கிருந்து இங்கு வந்த படங்கள் அப்படி. டீன் ஏஜ் வயதினருக்கு தீனி போடும் வகையில் இருக்கும்.
இப்போது நாம் பார்ப்பது ஒரு சூப்பர்ஹிட் படம். இதை நாம் ஒருமுறையாவது கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும். அது என்ன படம்னு பார்க்கலாமா....
ஜனகண மன. இதுதான் படத்தின் பெயர். ஒரு இந்தியனா இருக்குற அத்தனை பேருக்கும் இந்தப் படம் நிச்சயமாக ரொம்பவே பிடிக்கும். படத்தை அவர்கள் பார்க்கும் போது மெய்சிலிர்த்து விடுவார்கள்.
மலையாளப்படம் என்றாலும் தமிழில் தான் அதிகமான வசனங்கள் வரும். அதனால் ரசிகர்கள் படத்தைப் பார்க்கும்போது தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
அப்படி படத்தில் என்ன தான் விசேஷமாக சொல்லி விட்டார்கள் என்று நீங்கள் கேட்கலாம். மீடியாக்கள், அரசியல்வாதிகள் தான் இப்போது ட்ரெண்ட் செட். இவர்கள் தான் செய்திகளின் கதாநாயகர்கள். இவர்களைக் காட்டாத நாள்களே இல்லை.
ஏதாவது ஒரு அரசியல் செய்தி கட்டாயம் தினமும் பரபரப்பாக அரங்கேறி விடும். அந்த வகையில் மீடியாக்காரர்களும், அரசியல்வாதிகளும் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறாங்கன்னு படத்துல பிரமாதமா சொல்லிருக்காங்க.
படத்தைப் பார்க்கும்போது நிகழ்கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் இருப்பதுதான் படத்தோட தனிச்சிறப்பு.
சுராஜ், பிரித்விராஜ் நடிப்பு செம மாஸாக இருக்கும். வசனங்கள் பட்டையைக் கிளப்பும் ரகம். குறிப்பாக சொல்லணும்னா நீதிமன்ற காட்சிகள் பார்க்கும்போது திரையரங்கு அதிரும் என்பது நிச்சயம்.
படத்தில் எந்த ஒரு காட்சியையும் அவ்வளவு எளிதில் குறைசொல்லிவிட முடியாது. எல்லாவற்றிலும் ட்விஸ்ட் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருப்பார்கள். படத்தைப் பார்க்கும் ரசிகன் அட...அதுக்குள்ள படம் முடிஞ்சிட்டா என ஆதங்கப்படுவான். அந்த அளவு படத்தில் அழுத்தமான திரைக்கதை இருக்கிறது.
வசனங்களும், காட்சி அமைப்புகளும், நடிகர்களின் நடிப்பும் ரொம்பப் பிரமாதமாக இருக்கும். படத்தின் இயக்குனர் இதுபற்றி சொல்லும்போது, இந்தப் படத்தோட இரண்டாம் பாகத்தையும் தயாராக வைத்திருக்கிறேன் என்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தைப் பார்ப்பதற்கு முன் எல்லோரும் அதன் ட்ரெய்லரிலேயே கணித்து விடுவார்கள். சில படங்கள் ட்ரெய்லரில் பட்டையைக் கிளப்பும். படம் பார்த்தால் ஒன்றும் இருக்காது. புஸ்ஸாகி விடும்.
ஆனால் இது அப்படி அல்ல. படத்தின் ட்ரெய்லரும் சரி. முழு படமும் சரி. பட்டையைக் கிளப்பி விடும். நீங்கள் இந்தப் படத்தையா இவ்ளோ நாள் பார்க்காம இருந்தோம் என சொல்வீர்கள்.
படம் 2022ல் வெளியானது. பிருத்விராஜ், சூரஜ், பசுபதி ராஜ், ஜி.எம்.சுந்தர், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா உள்பட பலர் நடித்துள்ளனர். டிஜியோ ஜோஸ் அண்டனி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தை மம்முட்டி விவரிக்கிறார்.