அதிரடியாக களம் இறங்கப் போகும் மல்டி ஸ்டாரர் படங்கள்... அடேங்கப்பா இவ்ளோ பெரிய லிஸ்டா?..
2024ல் பெரிய பெரிய பிரம்மாண்ட படங்கள் களம் இறங்க உள்ளது. அதிலும் மல்டி ஸ்டார் படங்கள் நிறைய வருகிறது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் பெரிய பெரிய பட்ஜெட் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அது என்னென்ன படங்கள்னு பார்ப்போமா...
தக் லைஃப்
கமல், மணிரத்னம் கூட்டணியில் வரும் படம் தக் லைஃப். 36 வருடங்களுக்குப் பின் மீண்டும் இந்தக் கூட்டணி சேர்ந்துள்ளது. இதில் ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட் உள்ளதாம். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். திரிஷா கமலுக்கு ஜோடியாவார்னு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்படத்தில் விருமான்டியில் ஜோடியாக நடித்த அபிராமியும் நடிக்க உள்ளாராம். கவுதம் கார்த்திக்கும் நடிக்க உள்ளதாகக் கூடுதல் தகவல். கே.பாலசந்தருக்கு அடுத்தபடியாக மணிரத்னம் தளபதி, பொன்னியின் செல்வன் வரை பல மல்டி ஸ்டார் சப்ஜெக்ட் படங்களைக் கொடுத்துள்ளார்.
கோட்
தளபதி விஜய் நடிப்பில் வெளி வர உள்ள படம். இதன் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வந்துவிட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் இது ஹாலிவுட் படத்தில் வில்ஸ் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் மாதிரி இருக்குமோ என நினைக்கின்றனர்.
இது ஒரு டைம் லூப் படம்னு வெங்கட்பிரபு ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 22 வருடங்கள் கழித்து சினேகா நடிக்கிறாராம். வசீகரா படத்தில் தான் கடைசியாக நடித்தார். இந்தப் படத்தில் வில்லனாக மோகன் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் நமீர், பிரபுதேவா என பலரும் நடிக்க உள்ளனர்.
இந்தியன் 2
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். காஜல் அகர்வால், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக கமல் அதிகாலை 5 மணியில் இருந்து 9 மணி வரை மேக்கப் போடுவாராம். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
வேட்டையன்
லைகா பிலிம்ஸ் ஞானவேல் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம். இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் 32 வருடங்கள் கழித்து அமிதாப்பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாராம். இதற்கு முன் இவர்கள் இணைந்து நடித்த படம் ஹம்.
பகத் பாசிலுக்கு வில்லன் வேடமாம். ராணா டகுபதியும் நடிக்கிறார். ரித்திகா சிங், மஞ்சுவாரியர், துஷாரா விஜயனும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யாவாம். அவர் கங்குவா படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாம்.
தலைவர் 171
அடுத்ததா தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் தான் டைரக்டராம். நோ எல்சியு, நோ வயலன்ஸ், நோ டிரக்ஸ் நியூ ஸ்கிரிப்ட்னு படம் உருவாகப் போகிறதாம். இந்தப் படத்தில் ரஜினி நடிக்க கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனா நடிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதே போல சிவகார்த்திகேயனும் நடிக்க உள்ளாராம். அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
D 50
தனுஷ் 50 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷோர், அப்பர்னா பால முரளி, நித்யா மேனன், செல்வராகவன் உள்பட பலரும் நடிக்கிறார்களாம். விஷ்ணுவிஷால் தான் ஹீரோவா நடிக்க இருந்ததாம். கால்ஷீட் பிரச்சனையால் விலகிவிட்டார். இந்தப் படத்தை இயக்குபவர் தனுஷ்.