Connect with us

90களில் ரசிகர்களை கட்டுக்கடங்காத கவர்ச்சி அலையால் கட்டிப்போட்ட பூனைக்கண்ணழகி!

Cinema History

90களில் ரசிகர்களை கட்டுக்கடங்காத கவர்ச்சி அலையால் கட்டிப்போட்ட பூனைக்கண்ணழகி!

90களை கலக்கியவர் நடிகை சிவரஞ்சனி. தனித்துவமான அழகு, கவர்ச்சி கண்கள் என வசீகரித்தார். நடிப்பு, நடனம் என அனைவரையும் கொள்ளை கொண்டார். கமல், விஜயகாந்த், முரளி, பிரபு, சத்யராஜ், சரத்குமார், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் பூனைக்கண்களுக்குச் சொந்தக்காரி. இருந்தாலும் இவர் நடிப்பு, அழகில் மயங்கிய ரசிகர்கள் பலர் உண்டு. மிஸ்டர் கார்த்திக் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

கேரளாவைப் பூர்வீகம் ஆகக் கொண்டவர். 1975 நவம்பர் 15 அன்று சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் உமா மகேஷ்வரி. பெற்றோர் வேலை நிமித்தமாக சிவரஞ்சனியின் சிறுவயதிலேயே அரபுதேசம் சார்ஜாவிற்குச் சென்று விட்டனர். அதனால் இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தாத்தா பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். பள்ளியில் திரையரங்க நாடகங்களில் கலந்து ஆசிரியர்கள், மாணவியரின் பாராட்டுகளைப் பெற்றார்.

இவரது வசீகர கண்களைப் பார்த்து சக மாணவியர் ரசித்துக் கொண்டாடுவர். ஒருநாள் பள்ளிக்கு வந்த சிறப்பு விருந்தினர் முன் நடனம் ஆடி அசத்தியதால் சினிமா வாய்ப்பு கிடைத்தது. பெற்றோரின் சம்மதத்துடன் மிஸ்டர் கார்த்திக் படத்தில் கதாநாயகி அறிமுகம். முதல் படத்தில் வெற்றி கிடைக்கவில்லை. மனசார வாழ்த்துங்களேன், தங்கமனசுக்காரன், தலைவாசல், டேவிட் அங்கிள், சின்னமாப்ளே, பொன்விலங்கு, கலைஞன், ராஜதுரை என தொடர்ந்து படவாய்ப்புகள் வந்து குவிந்தன.

இதனால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாமல் பாதியில் கைவிட நேர்ந்தது. நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். 2வது படத்திற்கு பிறகு சிவரஞ்சனி என பெயர் மாற்றம் வந்தது. தலைவாசல் படத்தில் கதாநாயகியாக நடித்து ஹிட் கொடுத்தார். நற்பெயரும் வாங்கிக் கொடுத்தது. இதில் அதிகாலை காற்றே நில்லு, உன்னைத் தொட்ட தென்றல் ஆகிய பாடல்களின் மூலம், நடிப்பு, அழகு, நடனத்தில் கவர்ந்தார்.

1993ல் பிரபுவுடன் நடித்த சின்னமாப்ளே படத்தில் மைதிலி என்ற கேரக்டரில் வெளுத்து வாங்கினார். வெண்ணிலவு கொதிப்பதென்ன பாடலில் கவர்ச்சி கன்னியாகத் திகழ்ந்தார். கலைஞன் படத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் வந்து பார்வையால் போதை ஏற்றினார். இந்தப்படத்திற்கு சிவரஞ்சனி தான் பிளஸ் பாயிண்ட்.

அரவிந்த் சாமி உடன் தாலாட்டு, விஜயகாந்த் உடன் ராஜ துரை, ரமேஷ் அரவிந்த் உடன் புதிய தென்றல், கார்த்திக் உடன் காத்திருக்க நேரமில்லை, சரத்குமாருடன் அரண்மனைக் காவலன், சத்யராஜ் உடன் வண்டிச்சோலை சின்ராசு, பிரசாந்த்துடன் செந்தமிழ்ச்செல்வன், ராசாமகன் என வரிசையாக வந்து வெளுத்துக் கட்டினார்.

rasamagan prasanth, sivaranjani

தாலாட்டு படத்தில் மெதுவா தந்தி அடிச்சானே என் மச்சானே, புதிய தென்றல் படத்தில் தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க, அரண்மனைக்காவலன் படத்தில் ராஜகுமாரன் கட்டளையிட்டான், ராசாமகன் படத்தில் காத்திருந்தேன் கனியே, வைகாசி வெள்ளிக்கிழமை தானே ஆகிய பாடல்கள் சிவரஞ்சனியின் சூப்பர்ஹிட் பாடல்கள். ரசிகர்களை கிறங்கடித்த பாடல்கள் என்றே சொல்லலாம். அவ்வளவு அழகு, அவ்வளவு கவர்ச்சி என பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் காந்த கண்களாலும், கட்டான உடல் அழகாலும் சுண்டி இழுத்தார்.

வண்டிச்சோலை சின்ராசு படத்தில் எது சுகம் சுகம் அது பாடலில் காதல், அன்பு, காமம் என கலந்து கட்டி அடித்து ரசிகர்களை தனது தனித்துவமான நடிப்பால் சூடேற்றினார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் தனது திறமையைக் காட்டினார்.

1994ல் ஸ்ரீகாந்த்துடன் ஆமே என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். வெற்றிக்குப்பின் அவருடனே ஜோடியாக 4 படங்களில் தொடர்ந்து நடித்தார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென அவரது வீட்டிற்கு சிவரஞ்சனி வந்தார்.

அவர் வீட்டிற்கு வந்ததும் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தார். உடனே உங்கள் வீட்டு பூஜை அறை எங்கு உள்ளது என கேட்க அதற்கு எதுவும் கேட்காமல் சிவரஞ்சனி உள்ளே அழைத்துப்போனார். அங்கு சென்றதும் தான் கொண்டு வந்த மோதிரத்தை சிவரஞ்சனிக்கு போட்டு விட்டார்.

உடனே அவரது சிவரஞ்சனியின் அம்மா திகைத்து நிற்க, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் அதன் அடையாளம் தான் இது என்று சொல்லி திருமணத்திற்கும் சம்மதம் வாங்கி விட்டார். 1996 இறுதியில் நிச்சயதார்த்தம் நடந்தது.

sivaranjani family

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட முடிவு செய்தார் சிவரஞ்சனி. 1998ல் வெளியான துர்க்கை அம்மன் படத்தில் இருந்து இவர் நடிக்கவில்லை. இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ரோஷன் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே கதாநாயகனாக நடித்து விட்டார். இதற்கு முன்பு ருத்ரமாதேவியில் ராணா டகுபதியின் சிறுவயது வேடத்தில் சிறுவனாக நடித்து இருந்தார் ரோஷன்.

குடும்பத்தின் சந்தோஷத்திற்காகவும், பெற்றோரை பிரிந்து சிறுவயதில் இருந்தே தான் பட்ட கஷ்டங்களை தனது குழந்தைகள் படக்கூடாது என்பதற்றாகவும் தான் சினிமாவில் இருந்து விலகியதாக கூறுகிறார் சிவரஞ்சனி. தனது குழந்தைகளைப் பிரிந்து இவர் ஒரு போதும் இருக்க மாட்டாராம்.

தனது குழந்தைகளுக்கும் கண்கள் தன்னைப்போலவே இருக்க வேண்டும் என கருவில் உள்ளபோதே கடவுளிடம் வேண்டினாராம் சிவரஞ்சனி. அவரது வேண்டுகோள் நிறைவேறியது. ஆம். 3 பிள்ளைகளுக்கும் சிவரஞ்சனியைப் போலவே கண்கள் இருந்தன என்றால் ஆச்சரியம் தான்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top