Cinema History
பத்தாண்டுகளைக் கடந்த போதும் வீச்சு குறையாத வசந்தமாளிகை – ஒரு பார்வை
காதல் படம் என்றாலே அப்போது தேவதாஸ் படம் தான் நினைவுக்கு வரும். கல்நெஞ்சம் கொண்டவர்களும் காதலிக்காதவர்களும் கூட தேவதாஸ் படத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மனசு வலிக்குதுன்னு சொல்வாங்க.
எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் வசந்தமாளிகைக்கு ஈடாகாது. அழகான காதலை எளிமையாக சொன்னவிதம் படத்திற்கு கிடைத்த பிளஸ் பாயிண்ட் என்றே சொல்ல வேண்டும்.
அழகாபுரி ஜமீன். அதில் இளையமகன் ஆனந்த்தாக சிவாஜி வருகிறார். ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்று வாழ்க்கையை ரசிக்க ரசிக்க வாழ்ந்து கொண்டிருப்பார்.
கவலைன்னா என்னன்னே தெரியாம வாழ்ந்து வருவார். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு ரசிக்க ரசிக்க நாமும் இப்படி இருக்கலாமோ என்று கூட எண்ணத் தோன்றும். அந்த அளவு மனிதர் வாழ்ந்து விடுவார்.
விமானப்பணிப்பெண் லதாவாக வருகிறாள் வாணிஸ்ரீ. சிவாஜியும், வாணிஸ்ரீயும் விமானத்தில் தான் சந்தித்திருப்பார்கள். வாணிஸ்ரீக்கு அவரது குடும்பம் விமானப்பணிப்பெண் வேலை வேண்டாம் என்று சொல்வார்கள்.
ஒரு கட்டத்தில் சிவாஜி வாணிஸ்ரீயைக் காப்பாற்ற, அவருக்கு காரியதரிசியாகிறாள் வாணிஸ்ரீ. சிவாஜிக்கு அம்மா உள்பட எவருமே பாசம் காட்டுவதில்லை. ஒருகட்டத்தில் குடித்துக்கொண்டே இருக்கிற சிவாஜிக்கு வீட்டிலேயே அவமானம். இதை அறியும் வாணிஸ்ரீ அவரை திருத்த முயல்வார்.
அதைக் கேட்காமல் கோபத்தில் கிளாஸை தூக்கி வாணிஸ்ரீ மேல் எறிவார். வழியும் ரத்தத்தை எடுத்து வாணிஸ்ரீ சிவாஜிக்கு கொடுப்பார்.
இதை எல்லாம் பார்த்து வாணிஸ்ரீயிடம் பிளாஷ்பேக்கை சொல்லும் சிவாஜி அவர் மேல் சத்தியம் செய்து இனி குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்வார். இடையில் வாணிஸ்ரீக்கு திருட்டுப்பட்டம் கொடுத்து வீட்டை விட்டு துரத்துவார்கள். சிவாஜி எவ்வளவோ கேட்டும் அவர் வர மாட்டார்.
ஒரு கட்டத்தில் சிவாஜி மது குடித்தால் தான் பிழைப்பார் என்ற நிலை வர வாணிஸ்ரீ விஸ்கியைக் குடிக்கச் சொல்வார். இறுதியில் வாணிஸ்ரீயுடன் அவருக்காக கட்டி வைத்த வசந்தமாளிகையில் இல்லறத்தைத் தொடங்குவார் என படம் முடிகிறது.
படம் எவ்வளவு அருமையா எடுத்துருக்கான்னு அந்த ரசிகர்கள் சிலாகித்தனர். தெருவுக்கு தெரு நின்று கொண்டும், பஜாரில் நின்று கொண்டும் ரசித்து ரசித்து விமர்சித்த படம் இது. பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் ரகம்.
பாலாஜி, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்தனர். ராமநாயுடு தயாரிப்பில் இயக்குனர் பிரகாஷ் ராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் 1972ல் வெளியானது. 2013ல் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செகண்ட் ரிலீஸானது. இன்று (அக்டோபர் 1) அந்த மகத்தான நடிகர் செவாலியே சிவாஜிக்கு பிறந்த தினம்.