More
Categories: Cinema History Cinema News latest news

இப்பத்தான் சூப்பர்ஸ்டார்… ஆனால் முதலில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பட்டம் என்ன தெரியுமா?

Rajinikanth: தமிழ்சினிமாவில் ரொம்பவே போராடி நடிக்க வந்த ரஜினிகாந்த். இன்று சூப்பர்ஸ்டாராக உயர்ந்துவிட்டார். ஆனால் அவர் ஆரம்பகாலங்களில் கொடுக்கப்பட்ட டைட்டிலே இது இல்லையாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானால் ரஜினி முழுநீள ஹீரோவாக நடித்த திரைப்படம் பைரவி. இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை எஸ்.தாணு வாங்கி இருந்தார். அவர் தான் அண்ணாசாலையில் நிருவப்பட்டு இருந்த போஸ்டர்களில் சூப்பர்ஸ்டார் எனக் குறிப்பிட்டு விளம்பரம் செய்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?

இது பெரிய அளவில் பரபரப்பானது. ரசிகர்களின் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள ரஜினி ராஜகுமாரி தியேட்டருக்கு கலைஞானம், பஞ்சு அருணாச்சலத்துடன் ரஜினி வந்தாராம். அவர் இந்த போஸ்டர்களை பார்த்து இருக்கிறார். யார் சென்னை விநியோகிஸ்தர் எனக் கேட்டு இருக்கிறார்.

உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு  எஸ்.தாணு ரஜினியை வந்து சந்திக்கிறார். அவரை பார்த்த ரஜினிகாந்த் உங்க போஸ்டர் அருமை. எனக்குள் ஒரு அதிர்வை தருகிறது. ஆனால் அந்த பட்டம் வேண்டாம். நிறுத்தி விடுங்கள் என்றாராம். அவர் சொல்வதற்குள் சூப்பர்ஸ்டார் என்ற பெயர் பெரிய அளவில் ரீச் கொடுத்துவிட்டது.

இதையும் படிங்க: கூச்சப்பட்ட நடிகை!. சம்பளத்தை கொடுத்து விரட்டிவிட்ட இயக்குனர்!.. காதலிக்க நேரமில்லை அப்டேட்!..

ஒருக்கட்டத்தில் கிரேட்டஸ்ட் சூப்பர்ஸ்டார் என்று கூட விளம்பரம் செய்தாராம். சிவாஜி இருக்கும் போது என்னை அப்படி கூப்பிட வேண்டாம் என்றே ரஜினி சொல்லி இருக்கிறார். இதை தொடர்ந்து கலைஞானம், நடிகர் திலகம் என்றால் சிவாஜி. சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினியாக இருக்கட்டுமே என்றாராம்.

அதன்பின்னரே அந்த பட்டத்தினை தனக்கு முன்னால் போட சம்மதம் தெரிவித்தாராம். இதற்கு முன்னர், ரஜினி தன்னுடைய நடிப்பில் நிறைய ஸ்டைல் வச்சி நடித்து வந்தாராம். அதனால் அவரை ஆரம்பக்கட்டங்களில் ரசிகர்கள் ஸ்டைல் மன்னன் என்று அழைத்தார்களாம். பைரவிக்கு பின்னரே சூப்பர்ஸ்டார் என மாறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Akhilan