Connect with us

அங்கே இருந்தா சொர்க்கத்துல இருந்த மாதிரி இருக்கும்…!!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லும் ரகசியங்கள்

Cinema History

அங்கே இருந்தா சொர்க்கத்துல இருந்த மாதிரி இருக்கும்…!!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லும் ரகசியங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் யோகதாசத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா நிகழ்ச்சியில் ஒரு அற்புதமான ஆன்மிக உரையாற்றியது அனைவரும் அறிந்ததுதான். அதில் அவர் பேசும்போது அவரோட ரசிகர்கள் 2 பேர் சந்நியாசியாகி விட்டதாகவும், இமயமலையைப் பற்றி சிலாகித்தும் சொன்ன சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.

முதல்ல சின்ன வயசுல வந்து நாம உடம்ப நல்லா பார்த்துக்கணும். இந்த சம்சாரத்தில வந்து நமக்கு கடமைகள்லாம் இருக்கும்.

அதுக்கு தேவையானதை எல்லாம் செய்யணும்னு சொன்னா அதுக்கு உடம்பு ரொம்ப முக்கியம். அதுக்குலாம் உடம்போட ஹெல்த் வந்து நாம பார்த்துக்கணும். அதை விட முக்கியம்…60 வயசுக்கு அப்புறம் இன்னும் நாம உடம்போட ஹெல்த்த நல்லா பார்த்துக்கணும்.

Sriragavendra Rajni

ஏன்னு சொன்னா நம்ம மக்களுக்கு சொத்தை விட்டுட்டுப் போறோமோ இல்லையோ…நாம நோயாளிகளா கடைசி டைம்ல இருக்கக்கூடாது. அது வந்து அவங்களுக்கும் துன்பம். அந்த நோயாளிக்கு இன்னும் பெரிய துன்பம். நடந்துக்கிட்டு இருக்கும்போதே சந்தோஷமா ஆஸ்பிட்டலுக்குப் போகாம அப்படியே உயிர் போயிடணும். ஏன்னா நான் ரெண்டு வாட்டி ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்தவன்.

நான் எத்தனையோ படங்கள் பண்ணிருந்தா கூட எனக்கு ஆத்ம திருப்தி தந்தது ரெண்டே படங்கள். ஒண்ணு ராகவேந்திரா…இன்னொண்ணு பாபா. அந்தப்படங்கள் நடிக்கறதுக்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்த மகான்களுக்கு நான் எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியல.

ராகவேந்திரரை நிறைய பேருக்குத் தெரியாது. ராகவேந்திரா படம் வந்ததுக்கு அப்புறம் தான் எல்லாருக்குமே தெரிஞ்சது. அதே மாதிரி மகா அவதார் பாபாஜி அவர்களுடைய அந்த சக்தி…அந்த மாதிரி ஒரு யோகி இருக்காருங்கறது நிறைய பேருக்குத் தெரியாது. பாபா படம் வந்த பிறகு தான் அனைவருக்கும் தெரிஞ்சது.

Baba Rajnikanth

பாபா படம் பார்த்து நிறைய பேர் யோகதாசத்சங்கத்துல மெம்பர்ஸா ஆயிருக்காங்கன்னு அவங்க சொல்லி நான் கேள்விப்பட்டது. நிறைய பேர் இமயமலைக்கே அந்த கேவ்க்கு போயிருக்காங்க. அவங்களுக்கே ஆச்சரியமா இருக்கு. அங்க வருத கூட்டத்தைப் பார்த்து அங்க ஒரு சின்ன கேவ் இருக்கு.

அங்க வந்து ரொம்ப பேர் வர்றதனால அது விழுந்துட்டு பிராப்ளம் ஆயிடும்னு சொல்லி இப்போ அதை மூடிட்டாங்க. எனக்கு மிக சந்தோஷமான விஷயம் என்னன்னு சொன்னா என்னோட ரசிகர்கள் ரெண்டு பேர் சந்நியாசியா ஆயிட்டாங்க.

நான் வந்து இங்க வந்து ஒரு நடிகனா இன்னும் நிக்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது. எனக்கு வந்து அந்த ஆனந்தம் அந்த பாபா படம் எடுக்கும்போது என்ன கஷ்டங்கள் துன்பங்கள் வருதுங்கறது இப்ப எனக்கு புரியுது.

இமயமலைல என்ன இருக்குதுன்னு சொன்னா அங்க வந்து கங்கை பாயுற இடங்கள்…அந்த மரங்கள்…அந்த பச்சை…அந்த அமைதி வேறு எங்கேயும் கிடைக்காது. சொர்க்கத்துல இருந்த மாதிரி இருக்கும்.

Superstar rajni in Himalaya Babaji cave

அங்க உள்ள அந்த இயற்கையாகவே அமைந்த குகைகளை சொன்னா அது வெளிய வந்து கோல்டா இருந்தா அது உள்ளே வந்து சூடா இருக்கும். வெளியே ஹீட்டா இருந்தா உள்ளே ஏசி மாதிரி இருக்கும். அங்க வந்துட்டு சில மூலிகைகள் கிடைக்குது. அது வேற எங்கயும் கிடைக்காது. அதுல ஒரு பீஸ் சாப்பிட்டா ஒரு வாரம்…10 நாள் நல்ல எனர்ஜியா இருக்கும். உடம்புக்கு என்ன தேவையோ விட்டமின்ஸ் எல்லாம் அது கொடுக்கும். சில செடிகள் இருக்கும்.

அதை வந்து தோட்டத்துல வச்சிட்டோம்னா ஒரு ஈ, எறும்பு எதுவுமே உள்ளே வராது. அதனால தான் பெரிய பெரிய மகான்கள்…அப்ப இருந்தே வியாசர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் அங்க வந்து தவம் செய்ததாலதான் அந்த வைப்ரேஷன் எப்பவுமே அங்க இருந்துக்கிட்டே இருக்கு.

அந்த கங்கை நதி ஏன் வந்து புனிதம்னு சொல்றோம்னா முதல்ல வந்து அந்த மூலிகைகள்லாம் அந்த கங்கைல கலந்ததனால புனிதமானது. அங்க வந்து தவசிகள், முனிவர்கள், யோகிகள்லாம் குளிக்கறதனால அதை பவித்ரம்னு சொல்றோம்.

ஆண்டவன் புண்ணியத்துல நான் எங்க இருந்து வந்தேன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். பணம், பேர், புகழ் எல்லாத்திலயும் உச்சத்தை எல்லாம் பார்த்துட்டேன். பெரிய பெரிய புரொடியூசர்கிட்ட எல்லாம் பழகிட்டேன். ஆனால் இந்த சந்தோஷம்கறது 10 பர்சன்டேஜ் கூட கிடையாது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top