Connect with us
Goat

Cinema History

கோட் படத்தில் விஜயகாந்த் சீனைப் பார்த்த சூப்பர் ஸ்டார்… என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜயின் 68வது படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் அபாரமாக வந்துள்ளது. அது தான் கோட் படம். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், மோகன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிறப்புத்தோற்றத்தில் விஜயகாந்தும் ஏஐ தொழில்நுட்பத்தில் முதன்முறையாக நடிக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. முதல் சிங்கிளில் அதிரடியாக தன் நண்பர்களுடன் இணைந்து விசில் போடு என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார் விஜய்.

GV

GV

சின்ன சின்னக் கண்கள் என 2வது சிங்கிள் பாடல் வெளியானது. இதுவும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடம். அவற்றில் ஒன்றை வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்று டிஏஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

அப்படித்தான் மகன் கேரக்டரை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர். இந்தப் படத்தில் விஜயகாந்த் கேரக்டரை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளார்கள். இதை விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும் விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இரண்டரை நிமிடம் வருமாம். இது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வருமாம். விஜயகாந்த் வரும் காட்சிகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அதை வைக்க வேண்டாம் என விஜய் உறுதிபட கூறினாராம்.

இதையும் படிங்க… நீங்க பிஸியான நடிகைனு தெரியும்.. அதுக்கு இதுக்கெல்லாமா ஆள் வைப்பீங்க! மீனாவின் அட்ராசிட்டி

தற்போது விஜயகாந்த் வரும் காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த் வியந்து போனாராம். அவர் மேல் மிகுந்த அன்பு கொண்டவர் தான் சூப்பர்ஸ்டார். அவரே பாராட்டியதால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது.

Continue Reading

More in Cinema History

To Top