More
Categories: Cinema History Cinema News latest news

என்ன பேசணும்? எப்படி பேசணும்? எவ்வளவு பேசணும்னு புட்டு புட்டு வைக்கும் சூப்பர்ஸ்டார்….! பேசுறதுலயே இவ்ளோ விஷயம் இருக்கா….?!

உச்சநட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினி எப்பவுமே ஓபன் டாக் தான். அவருக்கிட்ட ஒளிவு மறைவுங்கறதே கிடையாது. அரசியலுக்கு வர்றேன்னு சொல்லிட்டு தன்னோட சூழ்நிலை காரணமாக அரசியலுக்கு வர முடியவில்லை.

என்னை நம்பிய மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இது ஏமாற்றம் தான். அதற்காக என்னை மன்னியுங்கள் என்றார். அப்போ ஏன் அப்படி சொன்னாருன்னு பலருக்கும் ஆதங்கம்.

Advertising
Advertising

அதுக்கு என்ன காரணம்னு பார்த்தா இப்போ தான் விடை கிடைச்சிருக்கு. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவன ஹெல்த் சம்பந்தமான விழா ஒன்றில் ரொம்ப யதார்த்தமாக பேசினார் ரஜினி. அப்போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகள் தான் இவை.

அறிவு சொல்லும் என்ன பேசணும்னு. திறமை சொல்லும் எப்படி பேசணும்னு. அரங்கம் சொல்லும் எவ்வளவு பேசணும்னு. அனுபவம் சொல்லும் என்ன பேசணும். என்ன பேசக்கூடாதுன்னு.

Rajni2

என்னோட அறிவு சொல்லுது. நீ இங்க வந்தது ஓகே. இங்க பேசுறதுக்கு ஏன் ஒத்துக்கிட்டேன்னு. என்னுடைய அனுபவம், அறிவு சொல்லுது. ரொம்ப ஜாக்கிரதையா பேசு.

நீ போற வேற மாதிரி கூட்டம் இது கிடையாது. எல்லாம் ஜட்ஜஸ், டாக்டர்ஸ், ஒயிட் காலர்ஸ். நீ ஒன் அறிவக் காட்டணும்னு சொல்லி பேஸ்புக், இன்டர்நெட், யுடியூப்…அதுல பார்த்ததை எல்லாம் இங்க அவுத்து விட்றாத.

அவங்களுக்குத் தெரியும். சில பேர் இருப்பாங்க. சில பேர் உள்ளேயே சிரிச்சிட்டு இருப்பாங்க. இப்ப எல்லாம் மீடியா இன்பர்மேஷன் டெக்னாலஜி டெவலப் ஆகி எல்லாருமே ஜேர்னலிஸ்ட் தான். எல்லாருமே செயிண்ட்ஸ் தான். எல்லாருமே சயின்டிஸ்ட் தான். எல்லாருமே டாக்டர்ஸ்தான்.

டாக்டர்ஸ்ல ரவிச்சந்திரன் எனக்கு பெஸ்ட் பிரண்ட். கிட்னி பாதிக்கும்போது அவரு தான் ராஜஸ்தான்ல எனக்கு சிகிச்சை பண்றதுக்கு சிபாரிசு பண்ணினாரு. ரொம்ப கட் அண்ட் ரைட்டா பேசுறவரு. 60 பர்சன்டேஜ் பாதிச்சிருந்தது. இப்ப கியுர் ஆயிடுச்சு. 2010ல இருந்து அவரு தான் எனக்கு பெஸ்ட் பிரண்ட்.

இது தவிர அவரு நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாரு. இம்மியுனிட்டி பவருக்காக என்னை வெளியே எங்கும் போக வேண்டாம். அப்போ கொரானோவோட 2வது அலை பயங்கரமா இருந்துச்சு. மாஸ்க் கண்டிப்பா போட்டுத் தான் வெளியே போகணும்.

அரசியல் உங்க விருப்பம். ஆனா டாக்டரா நான் சொல்றது என்னன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கும் ஒரு 10 அடி கேப் இருக்கணும். அதை மெயிண்டைன் பண்ணுங்கன்னாரு. ஆனா அவரு சொல்றது யதார்த்தத்துக்கு ஒத்து வராது.

கண்டிப்பாக 10 அடி கேப்ல நாம பிரசாரம் பண்ண முடியாது. அரசியல் வேண்டாம்னும் இதைக் காரணம் காட்டி சொல்ல முடியாது. பயந்துட்டான்னு சொல்வாங்க. என்ன செய்றதுன்னு யோசிக்கும் போது நான் உங்களுக்காகப் பேசுறேன்.

Rajni3

எங்கே யாருக்கிட்ட பேசணும்னு சொல்லுங்கன்னு சொன்னார் டாக்டர் ரவிச்சந்திரன். அப்போ தான் நான் அரசியலுக்கு வரவில்லைங்கற அறிக்கையை விட்டேன்.

நிறைய ஆல்கஹால் போட்டா லிவர் பாதிக்கும். நிறைய தம்ஸ் அடிச்சா லங்ஸ் பாதிக்கும். நிறைய பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகள் சாப்பிட்டா ஹார்ட் பாதிக்கும். ஆனா உப்பு எல்லாத்தையும் பாதிக்கும். உப்பு அதிகமாகவும் இருக்கக்கூடாது. உப்பு குறைவாகவும் இருக்கக்கூடாது.

Published by
sankaran v