Connect with us
kamal

Cinema News

பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்!.. தக் லைப் படத்தில் சிம்பு வந்ததன் பின்னணி!..

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்தான் நடிகர் சிம்பு. அப்பாவால் சினிமாவில் உயர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர், நடிப்பு, நடனம், இயக்கம் என எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். ஆனால், படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்கிற கெட்டப்பெயர் எடுத்தவர்.

எனவே, சிம்புவை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதுண்டு. ஆனால், சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் துணிந்து சிம்புவை வைத்து படமெடுக்க முன் வருகிறார்கள். அப்படி சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா, மாநாடு போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றது. ஆனாலும், வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையும் படிங்க: விஜய் படத்தை தட்டி பறித்த அஜித்குமார்… ஓபனாக போட்டு உடைத்த இயக்குனர்…

அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்காக சிம்பு நீண்ட தலைமுடி வளர்த்து, மீண்டும் உடலின் எடையை குறைத்து ஸ்லிம் லுக்குக்கு மாறினார். இதற்காக பல மாதங்கள் அவர் வெளிநாட்டிலேயே இருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு துவங்கப்படவில்லை இது ஒரு ஹிஸ்டாரிக் கதை என்பதால் ப்ரீ புரடெக்‌ஷன் வேலையே பல மாதங்கள் ஆகும் எனவும், ராஜ்கமல் அலுவலகத்தில் அதற்கான வேலை நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் திடீரென மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க துவங்கிவிட்டார்.

இதையும் படிங்க: ஒருவழியா இந்தியன் 2-வுக்கு தேதி குறிச்ச லைக்கா!. 5 நாள் வசூலை அள்ள போறாங்க!..

சமீபத்தில் இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியானது. அதோடு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமோ ஜீப்பில் சிம்பு மாஸ் காட்டுவது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. அப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் என்னவானது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

அந்த படம் வழக்கமாக சிம்புவை வைத்து உருவாகும் பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம். சமீபகாலமாக ஓடிடி உரிமைகள் மிகவும் குறைவான விலைக்கு போகிறது. எனவே, இப்போதைக்கு இந்த படத்தை துவக்குவது கடினம் என கமல் யோசித்திருக்கிறார். ஏற்கனவே அப்படத்திற்கு சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை அப்படியே தக் லைப் படத்திற்கு கமல் பயன்படுத்திக்கொண்டார் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top