
Flashback
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் அட்டர்பிளாப் மூவீஸ்… ஒரே ஆண்டில் நாலு படங்களா?
தமிழ்த்திரை உலகில் ஸ்டைல் மன்னன் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் நடித்த 170 படங்களில் ஒரு சில படங்கள்தான் தோல்வி அடைந்துள்ளன. பெரும்பாலானவை சூப்பர்ஹிட்தான். அப்படி தோல்வி அடைந்தாலும் அதில் ரஜினியின் நடிப்பு மாஸ்தான். கதைகளம் சரியில்லாததே காரணம். அப்படி அட்டர்பிளாப்பான படங்கள் என்னென்னன்னு பார்க்கலாமா…
சதுரங்கம்
1978ல் துரை இயக்கிய படம் சதுரங்கம். ரஜினி, ஜெயசித்ரா, பிரமிளா, ஒய்ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதைகளம் சரியில்லாததால் அட்டர் பிளாப் ஆனது.
இறைவன் கொடுத்த வரம்
1978ல் வெளியான படம். பீம்சிங் இயக்கியுள்ளார். ரஜினி, விஜயகுமார், ஸ்ரீகாந்த், சோ, சுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.வி. இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதைகளம் சரியில்லாததால் பாக்ஸ் ஆபீஸ்ல அட்டர் பிளாப் ஆனது.
என் கேள்விக்கு என்ன பதில்
பி.மாதவன் இயக்கத்தில் 1978ல் வெளியான படம். ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீபிரியா, நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை சுமாராக இருந்ததால் படம் அட்டர்பிளாப் ஆனது.
பாவத்தின் சம்பளம்
துரை இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையில் 1978ல் வெளியான படம் பாவத்தின் சம்பளம். ரஜினி, முத்துராமன், சுமித்ரா, பிரமிளா உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் மோசமான கதையால் படம் அட்டர்பிளாப் ஆனது.
மாவீரன்
1986ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான படம். தமிழ்சினிமாவின் முதல் 70எம்எம் படம் இதுதான். ரஜினி, அம்பிகா, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். சுமாரான கதைகளத்தால் படம் அட்டர் பிளாப் ஆனது.
கொடி பறக்குது
1988ல் பாரதிராஜா தயாரித்து இயக்கிய படம் கொடி பறக்குது. ரஜினி, அமலா, பாக்கியலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹம்சலேகா இசை அமைத்துள்ளார். படத்தின் மோசமான கதைகளம் படம் அட்டர்பிளாப் ஆனது. படம் பெய்லியர் ஆனாலும் இதில் வரும் ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ பாடல் சூப்பர்ஹிட் மெலடி.
நாட்டுக்கொரு நல்லவன்
1991ல் வி.ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியானது. ரஜினி, ஜூஹிசாவ்லா, ஜெய்சங்கர், மனோரமா, குஷ்பூ உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மோசமான கதைகளம் படத்தை அட்டர் பிளாப் ஆக்கியது.
குசேலன்

kuselan
2008ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம். ரஜினி, பசுபதி, மீனா, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு காமெடியைத் தவிர மற்ற எல்லாமே சுமார். கதைகளம் சரியில்லை. படம் அட்டர்பிளாப்.
கோச்சடையான்
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் எழுதிய படம் கோச்சடையான். 2014ல் வெளியானது. ரஜினி, தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர். மோசமான கதைகளத்தால் படம் அட்டர்பிளாப்.
லால் சலாம்
2024ல் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியானது. ரஜினி, விஷ்ணுவிஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்த படம். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். மோசமான கதைகளத்தால் அட்டர்பிளாப் ஆனது.