‘லவ் டுடே’ படம் நான் பண்ணியிருக்கனும்! எங்கேயோ கொண்டு போயிருப்பேன் - யாருங்க நீங்க?

by Rohini |   ( Updated:2023-08-10 03:47:48  )
love
X

love

தமிழ் திரையுலகில் 90கள் காலகட்டத்தில் இளசுகளை தன் இசையால் ஒரு பக்கம் கட்டிப் போட்டவர் இசையமைப்பாளர் பரணி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கூடவே சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

முதலில் பாடலாசிரியராக வாய்ப்பு கிடைத்தும் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் முதன் முதலில் பாடலை பாடினார்.அதனை தொடர்ந்து பல படங்களில் இவரின் இசையில் எண்ணற்ற ஹிட் பாடல்கள் அதுவும் மறக்க முடியாத பாடல்களாக அமைந்தன.

இதையும் படிங்க : தலைக்கு மேல பிரச்சினைனு சும்மாவா சொன்னாங்க! இவ்ளோதூரம் வந்தும் வீணாப் போச்சே

குறிப்பாக பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின் போன்ற படங்கள் ஆல்பம் ஹிட் பாடல்களாக அமைந்தது.அந்தப் படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் 90கிட்ஸிலிருந்து 2கே கிட்ஸ் வரைக்கும் மிகவும் ரசித்து கேட்கிறார்கள்.

bharani

bharani

துளி துளியாய், திரும்ப திரும்ப பார்த்து பார்த்து, முதலாம் சந்திப்பில் , சும்மா சும்மா, போன்ற பாடல்கள் திரும்ப திரும்ப கேட்டாலும் எங்கும் இல்லாத ஒரு இன்பத்தை கொடுக்கக் கூடியவையாக அமைந்தன. அப்படி பட்ட இசையமைப்பாளரை தமிழ் திரையுலகம் மறந்துதான் போயிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பரணி தன்னுடைய அனுபவங்களையும் தற்போது இருக்கும் இசையையும் பற்றி கூறினார். அதாவது ஒரு சில படங்களை பார்க்கும் போது இன்னும் இசையை மாற்றியமைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுமாம்.

இதையும் படிங்க : தெரிந்தே பாதாள குழியில் குதிக்கும் வடிவேலு!.. எல்லாம் மாமன்னன் ஹிட் கொடுத்த நம்பிக்கை!…

அப்படி குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிய படமாக லவ் டுடே படம் விளங்கியது. அந்தப் படத்தை பார்க்கும் போது படத்தில் அமைந்த பாடல்களின் வரிகளை கேட்கும் போது அந்தப் படத்திற்கு இவர் இசையமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணினாராம் பரணி.

Next Story