இது ஃப்ளாஷ்பேக்கா? ‘விடாமுயற்சி’ படத்தை பற்றி மேலிடத்தில் இருந்து வரும் அடுத்தடுத்த அப்டேட்

by Rohini |
vida
X

vida

எந்தவொரு அப்டேட்டும் வரலையே? ‘தல’ ய வச்சு என்னதான் பண்றீங்க? என விடாமுயற்சி படத்தை பற்றி கடந்த ஒருவருடமாக ரசிகர்கள் கொந்தளிப்பில் இருந்தார்கள். பல பிரச்சினைகளுக்கு பிறகு இப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சூடுபிடித்திருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பை அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனியை பொறுத்தவரைக்கும் அவர் கொடுத்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அருண்விஜயை வைத்து தடம் என்ற ஒரு அட்டகாசமான க்ரைம் திரில்லர் சப்ஜெக்ட்டில் ஒரு படத்தை கொடுத்தார்.

அந்த ஒரு படமே மகிழ்திருமேனியின் பெருமையை நின்னு பேசும். இப்படி இருக்கும் சூழலில் அஜித்துடன் கூட்டணி என்பது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை ஒரு கூஸ்பம்பில் வைத்திருந்தார்கள் படக்குழு. இதற்கிடையில் நேற்று படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானது.

அஜித் இஸ் பேக் என்ற வகையில் அனைவரும் அந்த போஸ்டரை கொண்டாடி வருகிறார்கள். ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் த்ரிஷா இந்த போஸ்டரில் பார்க்கும் போது இருவரும் செம க்யூட்டாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சுரேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு அப்டேட் வந்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

அஜித் ஃப்ளாஷ் பேக்கிற்காக தன்னுடைய வெள்ளை நிற முடியை கருப்பு நிறமாக மாற்றியிருக்கிறார் என்றும் வரும் 23 ஆம் தேதி வரை அஜர்பைஜானில் படப்பிடிப்பு இருக்கிறது என்றும் அதற்கடுத்தபடியாக ஐதராபாத்தில் ஒரு எட்டு நாள்கள் படப்பிடிப்பு இருக்கிறது என்றும் அதை முடித்த பின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக அந்த செய்தியில் சுரேஷ் சந்திரா கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story