STR49: கோலிவுட்டில் முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சின்ன வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு பின் வந்த தனுஷ் ஹாலிவுட், பாலிவுட், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய நிலையில், சிம்பு அப்படி எதுவும் வாங்கவில்லை. மேலும், சிம்பு மீது நிறைய கெட்ட பெயர்களும் இருக்கிறது. சரியாக சூட்டிங் வரமாட்டார்.. சில நாட்கள் நடித்துவிட்டு பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்பார்.. என்று பல புகார்கள் இவர் மீது உண்டு
சின்ன வயசுல இருந்து சினிமாவில் இருப்பதால் நடிப்பதிலேயே அவருக்கு சலிப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே நிறைய இடைவெளி விடுகிறார். அவரின் பத்து தல படம் வெளியாகி ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் படம் வெளியானது. தக் லைப் படத்தில் சிம்பு சிறப்பாகவே நடித்திருந்தாலும் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே அப்படம் வெற்றி பெறவில்லை.

சிம்புவின் 49 ஆவது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், சிம்புவின் 51வது படத்தை டிராகன் படை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்
49வது படத்தில் சில மாற்றங்கள் நடந்து அந்த படம் இப்போதைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
சிம்புவின் 49வது படமாக வெற்றிமாறன் படம் உருவானது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ சூட் எல்லாம் சில நாட்கள் நடந்தது. ஆனால் அதன்பின் படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. சிம்பு நிறைய சம்பளம் கேட்கிறார்.. வெற்றிமாறன் நிறைய சம்பளம் கேட்கிறார்.. என்பதால் கலைப்புலி தாணு கடுப்பாகி படத்தையே ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது.
ஒரு பக்கம் படம் ட்ராப் இல்லை.. ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘தொடங்கியது.. மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும் சிங்கத்தின் ஆட்டம் விரைவில்’ என பதிவிட்டிருக்கிறார். இந்த படத்திலிருந்து கலைப்புலி தாணு விலகி விட்டதாகவும்.. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது..
