லோகேஷ் கனகராஜ் மட்டும்தான் அப்படி பண்ணுவாரா?… காத்திருந்து பாய தயாராகும் சிறுத்தை சிவா… இனி ரணகளம்தான்!

Published On: March 18, 2023
Lokesh Kanagaraj
---Advertisement---

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் மிஷ்கின், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்திற்கு முதலில் புரோமோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆரம்பிக்கலாமா? என்று கமல்ஹாசன் கூறிய அந்த வசனம் பட்டித் தொட்டி எங்கும் மிகப் பிரபலமானது. அதனை தொடர்ந்து “லியோ” திரைப்படத்திற்கும் “Bloody Sweet” என்ற புரோமோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்ஜை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா, இந்த வழக்கத்தை கைக்கொள்ளப்போகிறாராம். ஆம்!

சூர்யா 42 புரோமோ

இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூர்யாவின் 42 ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

Suriya 42
Suriya 42

அதே போல் இத்திரைப்படம் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் சிவா, “சூர்யா 42” திரைப்படத்திற்காக புரோமோ ஒன்றை தயார் செய்து வருகிறாராம். இந்த புரோமோ வருகிற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இத்தகவல் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அசோக் செல்வன்… விரைவில் கேட்கப்போகும் டும்டும் சத்தம்… யார்ன்னு தெரியுமா?