கண்டுகொள்ளாத சன் பிக்ச்சர்ஸ்.! டிக்கெட் எடுத்து கொடுக்கும் சூர்யா.! என்ன கொடுமை சார்.!

by Manikandan |   ( Updated:2022-03-09 12:34:48  )
கண்டுகொள்ளாத சன் பிக்ச்சர்ஸ்.! டிக்கெட் எடுத்து கொடுக்கும் சூர்யா.! என்ன கொடுமை சார்.!
X

சூர்யா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ப்ரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். வினய் வில்லனாக நடித்துள்ளார். சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், புகழ் என பலர் நடித்துள்ளனர்.

குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள்ளது. வழக்கமாக ஒரு படம் வெளியாகிறது என்றால், பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்வார்கள்.

இதையும் படியுங்களேன் -செல்லாது செல்லாது.! எல்லா கோட்டையும் அழிச்சிடுங்க.! தயாரிப்பாளரை சூடேத்திய சிம்பு.!

அதில் பத்திரிகையாளர்கள் பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று கூறுவார்கள். வழக்கமாக படம் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு செல்வார்கள். அது படத்திற்கு நல்ல விளம்பரத்தை தரும். ஆனால். எதற்கும் துணிந்தவன் படத்திற்கு சன் பிக்ச்சர்ஸ் இவ்வாறு எந்த காட்சியும் ஏற்பாடு செய்யவில்லையாம்.

இதனை அறிந்த சூர்யா, அவரே பல பத்திரிகையார்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார். அதில் படத்தை பார்த்து படத்தின் விமர்சனங்களை எழுதுமாறு கூறியுள்ளாராம். ஆனால், முதல் நாள் ரசிகர்கள் தியேட்டரில் இருப்பார்கள் அவர்களுடன் எப்படி படம் பார்த்து விமர்சனம் எழுத முடியும் என பத்திரிக்கையாளர்கள் முணுமுணுத்து வருகின்றனராம்.

Next Story