ஹிட்டு கொடுக்கலனா இப்படித்தான்!....பாலாவுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா....
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான். ஏனென்றால் பாலா படங்கள் தான் சூர்யாவுக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அந்த வகையில் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பாலா சூர்யாவின் நடிப்பை திறமையாக வெளிக்காட்டி இருப்பார்.
ஆனால் இயக்குனர் பாலாவுக்கு கெட்ட நேரம் என்னவெனில், இறுதியாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த காரணத்தால் நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இருவரும் இணைவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா.
இப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம் சூர்யா. மகன் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது அதர்வாதான். ஆனால், இப்படத்திலிருந்து அவர் விலகி விட இரட்டை வேடத்தில் சூர்யாவே நடிக்கவுள்ளாராம். முதலில் அதர்வாவுக்காகத்தான் இப்படத்தின் கதையை உருவாக்கினார் பாலா. ஆனால், சூர்யா உள்ளே வரவும் அவரை கழட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரைகுறை ஜாக்கெட்டில் அலங்கோலமா போஸ் கொடுத்த நடிகை….இது செம ஹாட் மச்சி..
இந்நிலையில், இப்படத்தை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்கிற வரி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதையெல்லாம் படித்து பார்த்துவிட்டுதான் கையெழுத்தி இட்டுள்ளார் பாலா. பொதுவாக பாலா இத்தனை நாட்கள் படப்பிடிப்பு என தயாரிப்பாளரிடம் கூற மாட்டார். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது ஷூட்டிங் போவார். மேலும், பல நாட்கள் படப்பிடிப்பு எடுத்து பட்ஜெட்டை எகிற வைப்பார். ஒரே காட்சியை ஒரே நாள் முழுக்க எடுப்பார்.
இதையெல்லாம் தெரிந்துதான் சூர்யா இப்படி ஒரு கண்டிஷனோடு பாலா படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார் எனத்தெரிகிறது. அதோடு, அடுத்து சிறுத்தை சிவா, வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்களின் படத்தில் நடிக்க வேண்டியிருப்பதும் இதற்கு ஒரு காரணம் எனத்தெரிகிறது.
ம்ம்ம். ஹிட்டு கொடுக்கலனா இப்படித்தான் நடக்கும் போல!...