Categories: Cinema News latest news

சூர்யாவின் சூப்பர் பிளான்.! பூஜைக்கு சென்னை.! மத்த விஷயத்திற்கு கோவா.!

Sசூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் ஒரு நல்ல வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் வந்த சிறிய கௌரவ தோற்றம் மிக பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். இடையில் எதோ சில காரணங்களால் மீதி ஷூட்டிங் நடைபெறாமல் இருகிறது.

அதற்குள் அடுத்த பட ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார் சூர்யா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி ஹீரோயின் என கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்களேன் – மைக் மோகனுக்கு நன்றி சொன்ன மக்கள் செல்வன்.! பின்னணி இதோ…

இப்படத்தின் பூஜை இன்று சூர்யாவின் அகரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இன்று ஒருநாள் இங்கு பூஜை முடித்துவிட்டு, படக்குழு ஷூட்டிங்கிற்கு கோவா செல்ல உள்ளனராம். பெரும்பாலான காட்சிகள் அங்குதான் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது சிவாவின் அக்மார்க் ஆக்சன் படமாகவும், அந்த காலத்தில் நடக்கும் பீரியாட்டிக் கதையாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

Published by
Manikandan