எவளோ பெரிய நடிகர்.!? அவரை மாடு மேய்க்க விட்டுடீங்களே.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!

Published on: April 14, 2022
---Advertisement---

சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என தொடர்ந்து மூன்று படங்கள்  ஹிட் கொடுத்து விட்டு அடுத்ததாக புது தெம்புடன் இயக்குனர் பாலா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.

இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இப்படத்தில் சூர்யா மீனவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை சூர்யா தான் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சூர்யா தனது இணையதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் காளை மாட்டுடன் வாக்கிங் செல்வது போல் இருந்தது. அப்படியே இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறிவிட்டு நடந்து சென்று இருந்தார்.

இதையும் படியுங்களேன் – தமிழகத்தில் தளபதியை ஓரம்கட்டி வரும் கே.ஜி.எப்-2.! வெளியான உண்மை விவரங்கள்.!

இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்தே கதை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக காளைகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் சூர்யா. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment