விஜயை தொடர்ந்து சூர்யாவை களத்தில் இறக்கிய தயாரிப்பு நிறுவனம்.! தேதி குறிச்சாச்சு.!
தற்போதைய சூழலில் அஜித், கமலை தவிர மற்ற அனைத்து பெரிய நடிகக்கர்களின் கால்ஷீட் கொண்டுள்ள தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சன் பிக்ச்சர்ஸ் தான். இந்த நிறுவனம் அடுத்ததடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது.
சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து ரிலீசுக்கு தற்போது ரெடியாகியுள்ள திரைப்படங்கள் என்றால் அது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படங்கள் ஆகும். இதில் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதையும் படியுங்களேன் - இதெல்லாம் நியாயம்தானா சிவகார்த்திகேயன்.?! தளபதி விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு.!
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே அனைத்து பாடல்களும் முன்னரே வெளியாகிவிட்டன. அதனை அடுத்து இப்படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் விடியோவை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ். அதனை அடுத்து உடனுக்குடன் எதற்கும் துணிந்தவன் பட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது சன் பிச்சர்ஸ்.