Cinema News
பாலிவுட் கவர்ச்சி புயலை தட்டி தூக்கிய சூர்யா.! விவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான 2டி என்டேர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்யாகுமரி பகுதி சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான கதை இன்னும் தயாராகவில்லை என்பதால், சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதனை தொடர்ந்து, இணையத்தில் புது தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதாவது, இந்த படத்தில் முதலில் பீஸ்ட் படநடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது பிரபல பாலிவுட் ஹாட் நடிகையான திஷா பதானி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்களேன் – தளபதி விஜய் ரசிகர்களால் நெகிழ்ந்து போன சியான் விக்ரம்… நடந்த சம்பவம் அந்த மாதிரி.!
இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், இந்த படத்திற்கு முதலில் அனிருத் தான் இசைமைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இப்பொது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆனால், இந்த தகவல் எல்லாம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறது.