நடிகர் சூர்யாவுக்கு சிங்கம் 2க்கு பின் கடந்த பல வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் எதுவும் அமையவில்லை.. ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் அவை தியேட்டர்களில் வெளியாகவில்லை.. ஓடிடியில்தான் வெளியானது.
அதன்பின் சூர்யாவின் நடிப்பில் வெளிவானா கங்குவா பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவியது.. ரெட்ரோ திரைப்படம் ஓரளவுக்கு வசூலை கொடுத்தது.. அதன்பின் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என யாருக்கும் தெரியவில்லை.. ஏனெனில் இந்த படத்தை இன்னும் எந்த ஓட்டி நிறுவனமும் வாங்கவில்லை..
கருப்பு படத்தை முடித்த சூர்யா அடுத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.. கஜினி படத்திற்கு பின் ஒரு கோடீஸ்வரர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.. மேலும், இந்த படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது..
சஞ்சய் ராமசாமிக்கு பின் இந்த படத்தின் கதாபாத்திரம் சூர்யா ரசிகர்களை மிகவும் கவரும் எனத் தெரிகிறது…




