சூர்யாவுக்குள் இருக்கும் அரசியல் ஆசை... அதனாலதான் ஃபேன்ஸ்கிட்ட அப்படி சொன்னாரா?

surya
சூர்யா அகரம் பவுண்டேஷனை வைத்து படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் படித்தவர்கள் பலரும் பெரிய பெரிய பதவியில் இருக்கிறார்கள். அந்த வகையில் தனது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக மட்டும் இருக்கக்கூடாது. நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றே சொல்லலாம்.
Also read: என்னோட செருப்பு சைஸ் 41!… எப்படி இங்க வச்சே அடிக்கவா?!… வேற லெவல் சம்பவம் செய்த குஷ்பு!..
சூர்யாவுக்கு சமீபகாலமாக படங்கள் ஓடவில்லை. அதற்கு காரணம் கதைத் தேர்வு சரியில்லை என்பதுதான். சமீபத்தில் வெளியான கங்குவா படமும் கடின உழைப்பைப் போட்டாலும் கூட அப்படித்தான் தோல்வியைத் தழுவியுள்ளது. சூர்யாவுக்கு அரசியல் ஆசை இருக்கு என்று பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
அரசியல் கட்சிகள் என்றாலே ரவுடிகளை வச்சி மிரட்டுவாங்கன்னு ஒரு பயம் இருக்கு. போஸ்;வெங்கட் திமுகவில் முக்கிய நபரா இருக்காரு. சூர்யா அரசியல்கட்சி ஆரம்பிச்சிருந்தாருன்னா அவருக்கு இப்படி ஒரு நெகடிவ் விமர்சனம் வந்துருக்காது.
அவரு மேல ஒரு பயம் இருக்கும்னும் சொல்றாரு. அந்த வகையில் அவரு அரசியல்வாதிகள் எல்லாருமே கிட்டத்தட்ட ரௌடிகள் தான் என்ற மாதிரி சித்தரிக்க வர்றாரு. சீமானை எல்லாம் அப்படி விமர்சிக்கிறாங்க.

kanguva
சோஷியல் மீடியாவைத் தடை பண்ணனும். அப்ப தான் ரிவியு வராம இருக்கும். அதனால பணம் கொடுத்து பார்க்குறவன் சொல்லத் தான் செய்வான். இன்னைக்கு நெகடிவ் விமர்சனம் தான் பப்ளிசிட்டியா இருக்கு. சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் படத்தைப் பற்றி ஏதாவது பேசு. கண்டுக்காமப் போயிடாதன்னு தான் சொல்றாங்க. அதுதான் கரெக்ட்.
சூர்யாவுக்கும் அரசியல் ஆசை இருக்கு. 10 வருஷமா ஓடிடியில வெளியிட்டதைத் தவிர வரிசையா அவருக்குப் படங்கள் ஓடலை. அதனால அவரது அரசியல் ஆசையைத் தள்ளி வச்சிருக்காரு. கங்குவா படம் ஓடிருச்சுன்னா அரசியலுக்கு வந்துருப்பாரு. ரசிகர்களை சந்திக்கும்போது நீங்க எனக்காக நிறைய ஒர்க் பண்றீங்க.

surya bose venkat
உங்க எல்லாருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கு. இப்போ சொல்லி வச்சிக்கிறேன்னு பல மேடைகளில் சொல்றாரு. அதனால அவருக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கு. போஸ்வெங்கட் திமுகவில் இருப்பதால் அவருக்கு விஜயின் வருகை பிடிக்காம சூர்யாவைத் தூண்டுறாரு என்கிறார் அந்தனன்.
போஸ்வெங்கட் கங்குவா பட ஆடியோ லாஞ்சில் சூர்யா மாதிரி தன்னைப் பின்பற்றும் ரசிகர்களுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டு அரசியலுக்கு வரணும். அதுதான் தலைவனுக்கான தகுதின்னு விஜயை சூசகமாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.